Manjal Nilaavukku (From "Mudhal Iravu")

மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் உறவு, இது முதல் கனவு
இந்தத் திருநாள்
தொடரும்
தொடரும்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

ஆடுவது பூந்தோட்டம்
நீந்துவது பூங்காற்று
ஆசைக் கிளிகள், காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி
ஆடிப்புனலில் காவிரி ஓடிடும் வேகம்
அணைக்கின்ற புது மொழிகள்
ஒன்றாக வடிக்கின்ற புதுக் கவிகள்

மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் உறவு, இது முதல் கனவு
இந்தத் திருநாள்
தொடரும்
தொடரும்

வீணை என நீ மீட்டு
மேனி தனில் ஓர் பாட்டு
மேடை அமைத்து மேளம் இசைத்தால்
ஆடும் நடனம் கோடி
காலம் முழுதும் காவியம், ஆனந்தம் ராகம்
இனி எந்த தடையும் இல்லை
எந்நாளும் உறவின்றிப் பிரிவும் இல்லை

மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் உறவு, இது முதல் கனவு
இந்தத் திருநாள்
தொடரும்
தொடரும்



Credits
Writer(s): Kannadhasan, Ilayaraja
Lyrics powered by www.musixmatch.com

Link