Ulaginil Miga Uyaram

உலகினில் மிக உயரம்
மனிதனின் சிறு இதயம்
நினைவுகள் பல சுமக்கும்
நிஜத்தினில் எது நடக்கும்

விரல் நீட்டும் திசையில் ஓடாது நதிகள்
விதி போகும் திசையில் நீ ஓடு
உன்னை வாட்டி எடுக்கும்
துன்பம் நூறு இருக்கும்
தடை நூறு கடந்து போராடு

உலகினில் மிக உயரம்
மனிதனின் சிறு இதயம்

கடலினில் கலந்திடும் துளியே கவலை எதுக்கு
அலையுடன் கலந்து நீ ஆடு வாழ்க்கை உனக்கு
உறவுகள் இனி உனக்கெதுக்கு உலகம் இருக்கு
வலிகளை தாங்கிடும் கல்லில் சிலைகள் இருக்கு

அலைகள் அலைக்கழிக்கும் ஓடம் தான்
கடலை தாண்டி வந்து கரையேறும்
ஊசி துளைக்கும் துணி மட்டும் தான்
உடுத்தும் ஆடையென்று உருவாகும்
இருளில் இருந்து வெளிச்சம் பிறக்கும் எப்போதும்

உலகினில் மிக உயரம்
மனிதனின் சிறு இதயம்
நினைவுகள் பல சுமக்கும்
நிஜத்தினில் எது நடக்கும்

கனவுகள் சுமந்திடும் மனமே உறக்கம் எதற்கு
இருக்குது உனக்கொரு பாதை நடக்க தொடங்கு
தயக்கங்கள் இனி உனக்கெதுக்கு துணிந்த பிறகு
நடப்பது நடக்கட்டும் வாழ்வில் கடக்க பழகு

இடிகள் இடிக்கும் அந்த வானம் தான்
உடைந்து விழுவதில்லை எப்போதும்
அடியை தாங்கிகொள்ளும் நெஞ்சம் தான்
அடுத்த அடியை வைத்து முன்னேறும்
நினைப்பின் படியே எதுவும் நடக்கும் எப்போதும்

உலகினில் மிக உயரம்
மனிதனின் சிறு இதயம்
நினைவுகள் பல சுமக்கும்
நிஜத்தினில் எது நடக்கும்

விரல் நீட்டும் திசையில் ஓடாது நதிகள்
விதி போகும் திசையில் நீ ஓடு
உன்னை வாட்டி எடுக்கும்
துன்பம் நூறு இருக்கும்
தடை நூறு கடந்து போராடு



Credits
Writer(s): Annamalai, Vijay Antony
Lyrics powered by www.musixmatch.com

Link