Megathoodham - From "Airaa"

மேகதூதம்...
மேகதூதம்...
பாடவேண்டும்...

கானல் ஆகுமோ
காரிகை கனவு
தாகம் தீர்க்குமோ
கோடையின் நிலவு

தொலைவிலே வெளிச்சம்...
தனிமையில் உருகும் அனிச்சம்
கனவு தான் இதுவும்
கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
தினம் வருதே அச்சம்

மேகதூதம்
பாடவேண்டும்
மேனி மீது சாரல் வேண்டும்
காளிதாசன்
காண வேண்டும்
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்

மேகதூதம்...
மேகதூதம்...
பாடவேண்டும்...

நானும் நீயும்
காலம் எழுதி
காற்றில் வீசிய நாடகம்
அந்தக் காற்றே
மீண்டும் இணைத்து
அரங்கம் ஏற்றும் காவியம்

தேவமுல்லை பூக்கும் கொல்லை
கொண்டதே என் வீட்டின் எல்லை
என்னை நீ மறவாதிரு
புயல் காற்றிலும் பிரியாதிரு...

மேகதூதம்
பாடவேண்டும்
மேனி மீது சாரல் வேண்டும்
காளிதாசன்
காண வேண்டும்
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்

தும்பை போலே தூய அழகை
உன்னிடம் தான் காண்கிறேன்
என் கை நீட்டி ஏந்தி அணைக்கும்
நாளை எண்ணி ஏங்கினேன்

இந்த வார்த்தை கேட்கும் போது
ஈரம் ஊறும் கண்ணின் மீது
பாவையின் இந்த ஈரம்தான்
கருமேகமாய் உருமாருதே...

கானல் ஆகுமோ
காரிகை கனவு
தாகம் தீர்க்குமோ
கோடையின் நிலவு

தொலைவிலே வெளிச்சம்...
தனிமையில் உருகும் அனிச்சம்
கனவு தான் இதுவும்
கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
தினம் வருதே அச்சம்



Credits
Writer(s): S Thamari, Ks Sundaramurthy
Lyrics powered by www.musixmatch.com

Link