Andha Vannukku Rendu

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே

அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே

தாய்தானே... அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே... அறிவுக்கு ஆதாரம்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி தாய்க்கு பூஜைகள் செய்க
இமய மலைகளும் ஏழு கடல்களும் தந்தை நாமமே சொல்க

இங்கு கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடுசொல்லைக் கூட கேட்டதில்லை
ஒரு ஏழை தாய்போல் உலகில் செல்வமில்லை...

தாய்தானே... அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே... அறிவுக்கு ஆதாரம்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே...

தந்தை காலடி தாயின் திருவடி நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதைக் கண்டுகொள்கிறேன் தாயில்
நான் உறவென்ற தீபம் ஏற்றிவைப்பேன்
அதில் உயிர் என்ற எண்ணெய் ஊற்றிவைப்பேன்
நான் என்றும் கண்ணில் இருவரை சுமந்திருப்பேன்

தாய்தானே... அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே... அறிவுக்கு ஆதாரம்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே

அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே

தாய்தானே... அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே... அறிவுக்கு ஆதாரம்



Credits
Writer(s): Siva C, K Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link