Aasai Seppa Killikku (From "Tamizh Selvan")

ஆசை கேப்பைக்களிக்கு ஆசை
ஆசை கெளுத்தி மீனுக்கு ஆசை
நீ பொறந்த கிராமத்தை
நானும் வந்து பார்க்கணும்
அரிசி எந்த மரத்துல
காய்க்குதுனு கேட்கணும்
பாட்டு கட்டும் நம்ம வைரமுத்தை கேட்டு
பாரதிராசா சொன்ன கிராமத்தை காட்டு
ஆசை கேப்பைக்களிக்கு ஆசை
ஆசை கெளுத்தி மீனுக்கு ஆசை

உங்க பாத்ரூம்ல
குளிக்கையிலே பாதி தானே நனையும்
எங்க ஆத்தில் குளிச்சு பார்
அடியே புள்ள ஆணி வேரும் நனையும்
இந்த வேப்பமர காத்துக்கு
விலை இல்லையே
இதில் வாழ்ந்து வந்தா
உடல் வலி இல்லையே

இங்க வெட்டவெளி
பொட்டலுக்கு குறையில்லையே
நாம கிட்டி அடிக்க ஒரு தடையில்லையே

அந்த பச்சை வரப்புல
பனித்துளிக ஆடும் சடுகுடு
உன் பாசி மாலைக்கு
பனித்துளிய கோர்த்து எடு எடு
ஆசை கேப்பைக்களிக்கு ஆசை
ஆசை கெளுத்தி மீனுக்கு ஆசை

அந்த ஆலமரத்துல
கிளிக்கு யாரு ஊஞ்சல் கட்டி விட்டது
இந்த கரிச மண்ணுக்கு
துணிஞ்சு யாரு பச்சை கட்டிவிட்டது
இங்கே மாடு மேய்க்கும் பையனுக்கு
இருக்கும் சுகம்
ஒரு மந்திரிக்கில்ல ராஜ தந்திரிக்கில்ல

இங்கு நாத்து நடும் பொம்பளைக
பாட்டு சொன்னா
அதில் திருத்தம் இல்லை
ஒரு தெகட்டல் இல்ல

அந்த ஏசி ரூமத்தான்
தாண்டி இங்கு வாழ வருவியா

இந்த ஆத்தங்கரையில
குடிசை ஒன்னு போட்டு குடுமையா
ஆசை கேப்பைக்களிக்கு ஆசை
ஆசை கெளுத்தி மீனுக்கு ஆசை
நீ பொறந்த கிராமத்தை
நானும் வந்து பார்க்கணும்
அரிசி எந்த மரத்துல
காய்க்குதுனு கேட்கணும்
பாட்டு கட்டும் நம்ம வைரமுத்தை கேட்டு
பாரதிராசா சொன்ன கிராமத்தை காட்டு
ஆசை கேப்பைக்களிக்கு ஆசை
ஆசை கெளுத்தி மீனுக்கு ஆசை



Credits
Writer(s): Valee, Deva
Lyrics powered by www.musixmatch.com

Link