Nira - From "Takkar"

நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வலி யுகம் விடா

விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே

நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்

போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
என்னை தோண்டாதே திமிரே
பகல் வேசம் போடாதே

உனை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேன்

நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வலி யுகம் விடா

நிரா... திரா
நிரா திரா நிரா

நொடிகள் தாவி ஓடும்
முட்களோடு சண்டையிட்டு
வந்த பாதை போக சொல்லி
நேற்றை மீண்டும் கேட்டேன்

உருகி உருகி நீயும்
உளறிப்போன வார்த்தையாவும்
நியாபகத்தில் தேடி தேடி
காதில் கேட்டு பார்த்தேன்

உந்தன் மடியில் நானும்
உறங்கி போன தருணம் தன்னை
படம் பிடித்த மின்னலோடு
புகைப்படங்கள் கேட்டேன்

உதடும் உதடும் உரசும்
உயிர்பறித்த சப்தம் யாவும்
பதிவு செய்து சேர்த்து வைத்த
இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்

மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய்
மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்
உந்தன் மூச்சு காற்று ஊதி போனால்
பிழைத்திடுவேனடி(பிழைத்திடுவேனடி)

தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன
கொஞ்சம் பேசி பேசி தீர்த்தால் என்ன
இந்த காலம் நேரம் எல்லாம்
ஒருமுறை கனவாய் கலைந்திடுமா

உனை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேன்

விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
கரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே

நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்

போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
என்னை தோண்டாதே திமிரே
பகல் வேசம் போடாதே(வேசம் போடாதே)

உனை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேன்

நிரா நிரா
நிரா நிரா
நீ என் நீ என்
நிரா நிரா

திரா திரா
திரா திரா
நினை நினை
திரா திரா
நொடி சுகம் தரா(தரா)
வலி யுகம் விடா(விடா)



Credits
Writer(s): Nivas K Prasanna, Karthik Ku
Lyrics powered by www.musixmatch.com

Link