Chola Chola

கொடி கொடி கொடி பறக்க தட தடத்து
பரி பரி பரி துடிக்க கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க எதிரிகளை
வாளோடு வேலொடு போராடு போராடு
பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்
புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்

வரி வரி புலி அஞ்சாதடா
துஞ்சாதடா சோழா சோழா
மற மற புலி வீழாதடா
தாழாதடா ஷீலா ஷீலா
வீரம் மானம்
புலி மகன் இரு கண்ணல்லோ
ஏரே வாடா
பகை முகம் செகும் நேரம் வீரா

கொடி கொடி கொடி பறக்க தட தடத்து
பரி பரி பரி துடிக்க கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க எதிரிகளை
வாளோடு வேலொடு போராடு போராடு
பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்
புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்

அக முக நக கள்ளாடிட
தள்ளாடிட வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா
இன்னாதிதா ஆசை தீதா

மண்ணான மண்மேல் பித்தானேன்
விண்ணாளும் கொடிமேல் பித்தானேன்
கண்ணான குடிமேல் பித்தானேன்
பெண்ணான பெண்ணாலே பித்தானேன்

மண்ணான மண்மேல் பித்தானேன்
விண்ணாளும் கொடிமேல் பித்தானேன்
கண்ணான குடிமேல் பித்தானேன்
பெண்ணான பெண்ணாலே பித்தானேன்

அரக்கி எனது தேயமும் காயமும் நீயடி
உடல் உடல் உடல் முழுக்க
செருகளத்து வடு வடு வடுவிருக்க
ஒருத்தி தந்த வடு மட்டும்
உயிர் துடிக்க வருத்தமென்ன
கொடு சோமரசம் குடடா மறடா
இவன் பயணம் இனி ஓயாதே
எடு வாளை எடு நடடா நடடா
வெறி பிடித்த புலி ஓயாது
அக முக நக கள்ளாடிட
தள்ளாடிட வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா
இன்னாதிதா ஆசை தீதா

சிந்தித்தோம் பெருந்தேச கனவினை
சந்தித்தோம் கடும்போரின் கெடு வினை
நிந்தித்தோம் கொடுங்கூற்றப்பகை அழித்தோம்

ஓ ஓ மன்னித்தோம் அடி விழுந்த பகைவரை
தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை
கண்டித்தோம்அடங்காரை சிறை எடுத்தோம்
கற்பித்தோம் உயிர் சோழம் என
ஒப்பித்தோம் அதை வேதம் என
மேகம் தொட்டு வானம் எட்டு
வேங்கை புலி இமயம் நாட்டு

கொடி கொடி கொடி பறக்க தட தடத்து
பரி பரி பரி துடிக்க கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க எதிரிகளை
கொடு சோமரசம் குடடா மறடா
இவன் பயணம் இனி ஓயாதே
எடு வாளை எடு நடடா நடடா
வெறி பிடித்த புலி ஓயாதுCredits
Writer(s): A.r. Rahman, Ilango Krishnan
Lyrics powered by www.musixmatch.com

Link