Thirakkadha (From "En Swasa Katre")

திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள் நானம்

பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்
ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்

அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்

திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள் நானம்

காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ
மண்ணோடு விழிகிற அருவி என்ன சொல்லுதோ
அது தன்னைச் சொல்லுதோ இல்லை உன்னைச் சொல்லுதோ
அட புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது அதோ அதோ அதோ அங்கே
ஐயையோ வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ அவை வண்ணச் சிறகுகளோ
வானவில் பறக்கின்றதோ

அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது
புதிய கண்கள் நெஞ்சில் திறக்கின்றது
மேகம்போல் காட்டை நேசி மீண்டும் நாம் ஆதிவாசி
உன் கண்கள் மூடும் காதல் காதல் காதல் காதல் காதல் யோசி

திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள் நானம்

கை தொட்டுத் தட்டித் தட்டி பூவை எழுப்பு
காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லியனுப்பு
அட என்ன நினைப்பு அதைச் சொல்லியனுப்பு
என் காலடியில் சில வீடுகள் நகருது இதோ இதோ இதோ இதோ இங்கே
ஆஹாஹா வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ அவை நத்தைக் கூடுகளோ
வீடுகள் இடம் மாறுமோ

புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது
நாட்டுக்குப் பூட்டு போடு காட்டுக்குள் ஓடியாடு
பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு

திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள் நானம்

பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்
ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்

திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே...
பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள்...

திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே...
பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள்...
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே...

Credits
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Rahman A R, Velliveethiyaar
Lyrics powered by www.musixmatch.com

Link