Engae Pogudho Vaanam (From "Engae Pogudho Vaanam")

எங்கே போகுதோ வானம்

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்
வாழ்வில் மீண்டாய் வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா
காற்றின் பாடல்கள் என்றுமே தீராது
வெற்றிச் சங்கொலி என்றுமே
ஓயாது ஓயாது

ஹே உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு
ஹே எனது தோழா நம் தாய்நாட்டை பொன்னாக்கு

ஆகாயம் தடுத்தால் பாயும் பறவை ஆவோம்
மாமலைகள் தடுத்தால் தாவும் மேகம் ஆவோம்
காடு தடுத்தால் காற்றாய் போவோம்
கடலே தடுத்தால் மீன்கள் ஆவோம்

வீரா வைரம் உன்
நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து
கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்
லட்சியம் என்பதெல்லாம் வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம் வாள் கண்டு பிறப்பதடா

எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் நாமும்
வாழ்வில் மீண்டாய் வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா

எந்தன் வில்லும் சொல்லிய சொல்லும்
எந்த நாளும் பொய்த்ததில்லை
இளைய சிங்கமே எழுந்து போராடு போராடு

வீரா வைரம் உன்
நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து
கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்

உங்களின் வாழ்த்துக்களால்
உயிர் கொண்டு எழுந்து விட்டேன்
வாழ்த்திய மனங்களுக்கு
என் வாழ்க்கையை வழங்கி விட்டேன்

ஹே உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு
ஹே எனது தோழா நம் தாய்நாட்டை பொன்னாக்கு

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்
வாழ்வில் மீண்டாய் வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா
காற்றின் பாடல்கள் என்றுமே தீராது
வெற்றிச் சங்கொலி என்றுமே
ஓயாது ஓயாது



Credits
Writer(s): A R Rahman, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link