Kaathal Vaibhogame (From "Suvarillatha Chithirangal")

ஆ: காதல் வைபோகமே காணும் நந்நாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுமே

பெ: காதல் வைபோகமே காணும் நந்நாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுமே

ஆ: கோடைகாலத்து தென்றல்
குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடைகாலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்
பெ: வானம் தாலாட்டு பாட
மலைகள் பொன்னூஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட
ஆ: பூவில் மேடையமைத்து
பூவை உன்னை அணைத்தால்
பெ: கதகதப்பு, துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு

ஆ: காதல் வைபோகமே காணும் நந்நாளிதே
பெ: வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுமே

இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்தராகம் சுகபோகம், தாபம்
ஆ: மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம் சமபோகம், யோகம்
பெ: வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்ந்தால் உந்தன் அருகில்
ஆ: அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மம் எடுப்பேன்

பெ: காதல் வைபோகமே காணும் நந்நாளிதே
ஆ: வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப்பண்பாடுமே



Credits
Writer(s): Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link