Enga Povadhu

ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ...

யாரைக்கேட்பது எங்கே போவது
தூண்டில் புழுவென ஆனாய்
ஏதோ நடக்குது கண்ணை இருட்டுது
நெஞ்சம் நொறுங்கித்தான் போனாய்

நதியோடு பயணம் போனால்
அலை வந்து மோதுமே
அதைப்போல வாழ்க்கை கூட போராட்டமே

விதியென்னும் நூலில் ஆடும்
பொம்மை போல வாழ்கிறோம்
வழிதோறும் காணல் நீராய்
ஏமாற்றும் தோற்றம் காட்டும்

யாரைக்கேட்பது எங்கே போவது
தூண்டில் புழுவென ஆனாய்
ஏதோ நடக்குது கண்ணை இருட்டுது
நெஞ்சம் நொறுங்கித்தான் போனாய்

ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ...

பனிப்புகை பார்த்தே தான்
நெருப்பென்று தவறாக
பறவைகள் நினைத்தாலே வழியில்லையே
துயரங்கள் எப்போதும் நிரந்தரம் கிடையாது
கிழக்கினில் விடிந்தாலே இருள் இல்லையே

அடைமழை அடித்தாலும் மண் சாயும் மரம் சாயும்
மலை என்றும் சாயாதடா
இன்பம் மட்டுமே வாழ்க்கை இல்லையே
கொஞ்சம் துன்பமும் வேண்டும்
மழைத்துளியிலே வெயில் சேர்ந்தப்பின்
தானே வானவில் தோன்றும்

நதியோடு பயணம் போனால்
அலை வந்து மோதுமே
அதைப்போல வாழ்க்கைக்கூட போராட்டமே
விதியென்னும் நூலில் ஆடும்
பொம்மை போல வாழ்கிறோம்
விதிமாற்றும் விதிகள் செய்தால்
உன் வாழ்க்கை உந்தன் கையில்

இன்பம் மட்டுமே
வாழ்க்கை இல்லையே
கொஞ்சம் துன்பமும் வேண்டும்
மழைத்துளியிலே வெயில் சேர்ந்தப்பின்
தானே வானவில் தோன்றும்



Credits
Writer(s): Yuvan Shankar Raja, N Muthu Kumaran
Lyrics powered by www.musixmatch.com

Link