Raadha Radha Nee

ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்
ராதா ராதா நீ எங்கே

நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளிக் கொண்டேன்
நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளிக் கொண்டேன்
நானொரு பக்கம் ஏனடி வெட்கம்
என்ன சொல்லிவிட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள்
போதையில் மூழ்கிவிட்டேன்

கண்ணா கண்ணா நீ எங்கே
ராதா எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்
கண்ணா கண்ணா நீ எங்கே

காலடி ஓசையிலே யாழ் இசை கேட்டு வந்தேன்
காலடி ஓசையிலே யாழ் இசை கேட்டு வந்தேன்
கண்ணன் கோவிலில் கண்ணன் காவலில்
கவிதை பாடி வந்தேன்
இடையின் மேகலை நடனமாடிடும்
ஏக்கத்தில் ஓடி வந்தேன்

ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்

ராதா
கண்ணா
நீ எங்கே



Credits
Writer(s): Kannadhasan, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link