Usilampatti Penkutti

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்
பேச்சு - உன்
ஒசரம்பாத்தே என் கழுத்து
சுளுக்கிப் போச்சு
கூடமேலே கூடவெச்சு
குச்சனூரு போறவளே
மெதுவாகச் செல்லேண்டி - உன்
கூடையில வெச்ச பூவு
கூடலூரில் வீசுதடி
குதிபோட்டு வந்தேண்டி
உசில உசில உசிலம்பட்டி
உசில உசில உசிலம்பட்டி
கண்டமனூரு மை தாரேன்
கண்ணுல வெச்சா ஆகாதா
மையா வெக்கும் சாக்க வெச்ச
கையா வெப்பே தெரியாதா
அலங்கனல்லூர் ஜல்லிக்கட்டு
சேர்ந்துபோனால் ஆகாதா
மாடுபுடிச்சி முடிச்ச கையில்
மயிலப் புடிப்பே தெரியாதா
மயிலே மயிலே இறகொண்ணு
போடு
தானா விழுந்தா அது உம் பாடு
இறகு எதுக்கடி தொகையே
கெடைக்கும் அதுக்கும் காலம்
வரும்
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்
பேச்சு - நீ
ஓரக்கண்ணால் பார்த்தாலே நான்
புள்ளதாச்சி
கூடமேலே கூடவெச்சு
குச்சனூரு போறவளே
உருவித்தான் பாக்காதே - என்
கூடையில வெச்ச பூவு
கூடலூரில் வீசுதுன்னு
துருவித்தான் கேட்காதே
உசில உசில உசிலம்பட்டி
உசில உசில உசிலம்பட்டி
வெடலப்பொண்ணு நுனிநாக்கு
வெத்தலையாலே செவந்திருக்கு
வேப்பமரத்துக் கிளி மூக்கு
வெத்தல போட்டா செவந்திருக்கு?
இடுப்புச் செல எடவெளியில்
எனக்கு மட்டும் எடமிருக்கு
ஆசைப்பட்ட மாமனுக்கு
ஆண்டிப்பட்டி மடமிருக்கு
தணியும் தணியும் தானா
தணியும்
தடியால் அடிச்சா கொடியா
மலரும்
மனச சேலைக்குள் மறைப்பது
ஒளிப்பது
அதுதான் பெண்ணின் குணம்
(உசிலம்பட்டி)



Credits
Writer(s): R. Vairamuthu, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link