Yeduvaraiyo

எதுவரையோ எதுவரையோ எதுவரையோ இந்த வாழ்க்கை
மனிதர்களின் உருவத்திலே மிருகங்களின் ஆட்டம்
சிறுகதையோ விடுகதையோ தொடர்கதையோ இந்த வாழ்க்கை
அரக்க குணம் இரக்க மனம் இடையினிலே போராட்டம்

யாருக்காக யாரோ சாக
சாமி கூட கண்ணை மூடி தூங்க போனதோ

எதுவரையோ எதுவரையோ எதுவரையோ இந்த வாழ்க்கை
மனிதர்களின் உருவத்திலே மிருகங்களின் ஆட்டம்
சிறுகதையோ விடுகதையோ தொடர்கதையோ இந்த வாழ்க்கை
அரக்க குணம் இரக்க மனம் இடையினிலே போராட்டம்

வானம் தீர்ந்துவிட பூமி தூர்ந்துவிட காலம் தூரமில்லையே
நேசம் காய்ந்துவிட நியாயம் ஓய்ந்துவிட எங்கும் ஈரமில்லையே
ஏன் இந்த கோரம் மறுபடியும் பிறந்திடவா போறோம்
வாழ்வை கொன்று வாழும் வாழ்க்கை வாழ வேண்டுமா

எதுவரையோ எதுவரையோ எதுவரையோ இந்த வாழ்க்கை
மனிதர்களின் உருவத்திலே மிருகங்களின் ஆட்டம்
சிறுகதையோ விடுகதையோ தொடர்கதையோ இந்த வாழ்க்கை
அரக்க குணம் இரக்க மனம் இடையினிலே போராட்டம்

நீதி தேவன் உடல் வீதி ஓரத்திலே மோதி நசிங்கி கிடக்க
நாதி யற்ற சனம் போகும் திசை மறந்து தீயில் வெந்து தவிக்க

மாறிடாத மனிதமும் வேர்விடாத
பூமி கூட பாவம் கூட பாரம் கூடுதே

எதுவரையோ எதுவரையோ எதுவரையோ இந்த வாழ்க்கை
மனிதர்களின் உருவத்திலே மிருகங்களின் ஆட்டம்
சிறுகதையோ விடுகதையோ தொடர்கதையோ இந்த வாழ்க்கை
அரக்க குணம் இரக்க மனம் இடையினிலே போராட்டம்

Credits
Writer(s): Devi Sri Prasad, Viveka
Lyrics powered by www.musixmatch.com

Link