Unakkena Unakkena Piranthenae

உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே

உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே

உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே

திருவிழா போல காதல்தான்
அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில்
நம்மை தேடும் செய்தி தருவோமா

ஸ்ரீ ராம ஜெயத்தை போல் உனது பெயரை
தினம் எழுதி பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி
தினம் சொல்ல கேட்கிறேன்
அடி ஒரு கோடி கொலுசின்
உன் கொலுசின் ஓசை
உயிர் வரை கேட்கிறதே

உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே

கடலாக நீயும் மாறினால்
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்

அறிதாரம் பூசும் ஒரு வானவில்லை
பரிசாக கேட்கிறேன்
அகல் தீபமாய் மாரி ஆகாய நிலவை உறவோடு பாக்கிறேன்
அது பொய் என்றபோதும் உன்னோடு பேசும்
கனவுகள் வேண்டுகிறேன்

உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே

உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
உனக்கென உனக்கென பிறந்தேனே



Credits
Writer(s): Sirpy, B. Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link