Enthan Uyire

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னைப் பார்த்த உடன்
என்னை தோற்ற உடன் வெட்கத்தில் தலை குனிந்தேன்

அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அலுக்க வில்லை

சின்ன சின்ன கூத்து நீ செய்யுரத பார்த்து உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்
வண்ண வண்ண பாதம் நீ வச்சு வச்சு போகும் அந்த தரையாய் நான் இருப்பேன்
கவலைகள் மறக்குதே
கவிதைகள் பிறக்குதே
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

உன்னை சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கு எங்கோ சுற்றி வந்த
என்னை நிற்க வைத்து அடையாளம்
நீ கொடுத்தாய்

உன்னை சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி பத்து விரல் நான் மடிப்பேன்
புது மஞ்சள் தாலி மின்ன
மெட்டி கேலி பண்ண
பக்கத்தில் நான் கிடப்பேன்

கண்ணில் மீனை வச்சு புத்தம் புது தூண்டில் போட்டது நீ அல்லவா
கள்ளத் தனம் இல்லா உன் வெள்ளை உள்ளம் கண்டு விழுந்தது நான் அல்லவா
உலகமே காலடியில்
கரைந்ததே ஓர் நொடியில்
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன் அருகே நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே



Credits
Writer(s): Deva, Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link