Pogathe Pogathe

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

உன்னோடு வாழ்ந்த காலங்கள்யாவும் கனவாய் என்னை மூடுதடி
யாறென்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருபேன்... உயிரோடு பார்த்திருபேன்...

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போவதுபோல்
என் வாழ்வில் வந்தேவான ஏமாற்றம் தங்களையே
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருண்டதடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன

Credits
Writer(s): Vaalee, Mahadevan K V, Kannadhasan
Lyrics powered by www.musixmatch.com

Link