Thedi Unnai - Misra Sivaranjini - Adi

தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி
தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்

பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாம் களைவாய்
பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாம் களைவாய்
கோடி நலம் செய்திடுவாய் குறைகளெல்லாம் தீர்ப்பாய்
கோடி நலம் செய்திடுவாய் குறைகளெல்லாம் தீர்ப்பாய்

எப்போழுதும் கவலையிலே...
எப்போழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி
எப்போழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி
ஒப்பியுனதேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்
ஒப்பியுனதேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்

சக்தியென்று நேரமெல்லம் தமிழ்க்கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைதும் தீரும்
சக்தியென்று நேரமெல்லம் தமிழ்க்கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைதும் தீரும்

ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்
ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம்
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம்

தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்

துன்பமே இயற்கை எனும் சொல்லை மறந்திடுவோம்
துன்பமே இயற்கை எனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டிநிற்போம் யாவும் அவள் தருவாள்
இன்பமே வேண்டிநிற்போம் யாவும் அவள் தருவாள்

நம்பினோர் கெடுவதில்லை நான்குமறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்
நம்பினோர் கெடுவதில்லை நான்குமறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்

தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்
தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்
தேசமுத்து மாரி தேசமுத்து மாரி
தேசமுத்து மாரி தேசமுத்து மாரி



Credits
Writer(s): Subramanya Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link