Kizhaku Sivakayile (From "Seevalaperi Pandi")

கெழக்கு செவக்கயிலே
கெழக்கு செவக்கயிலே
கீர அறுக்கையிலே
நான் கீர அறுக்கையிலே

அந்த கரும்பு கடிக்கயிலே
அந்த கரும்பு கடிக்கயிலே
நான் பழச நெனைக்கயிலே
பல் அருவா பட்டிருச்சே

சபாஷ் கோனாரே

கெழக்கு செவக்கயிலே
கீர அறுக்கையிலே
அந்த கரும்பு கடிக்கயிலே
நான் பழச நெனைக்கயிலே
பல் அருவா பட்டிருச்சே

மீசை வெட்டருவா
என் ஆசை சுட்டிருமா?
உன் வேஷம் கலைஞ்சிருமா?
நான் நேசம் நினைக்கயிலே
நெஞ்சுருகி போயிருச்சே
நெஞ்சுருகி போயிருச்சே

மனசு ஆரலயே
என் கோபம் தீரலயே
நம் வாழ்வும் மாறலயே
உன் முகத்தை பார்க்கயிலே
என் துன்பம் பறந்திருச்சே

ராசா மாறிடணும்
என் பாசம் புரிஞ்சிக்கணும்
புது பாதை பார்த்துக்கணும்
நல்ல திசையில் நடக்கையிலே
எதிர் காலம் பொறந்திடுமே
எதிர் காலம் பொறந்திடுமே

வாழ்க்க நாடகமா?
என் பொறப்பு பொய் கணக்கா?
தினந்தோரும் வெறும் கனவா?
ஏன் விதிய எழுதையிலே
அந்த சாமியும் உறங்கியதே

ஐயா களங்காதே
சூரியன் உடையாதே
ஊர் வஞ்சம் நிலைக்காதே
நீ உள நாள் மட்டும் தான்
இந்த உசிரும் போகாதே
இந்த உசிரும் போகாதே



Credits
Writer(s): Aditya Adityan, N/a Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link