Aalanaalum Aalu - From "Palaivana Solai"

ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு
மிச்ச விவரம் வேணுமுன்னா மச்சான போயி கேளு கேளு

ஹேய் ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு
மிச்ச விவரம் வேணுமுன்னா மச்சான போயி கேளு கேள

கனியும் காலம் வரும் காதலுக்கு ஆளு வரும்
கண்ணில் நாணம் வரும் கால் விரலோ தாளமிடும்
ஆ-கனியும் காலம் வரும் காதலுக்கு ஆளு வரும்
கண்ணில் நாணம் வரும் கால் விரலோ தாளமிடும்

உனக்கு மாலை வரும் ஊருக்கெல்லாம் ஓலை வரும்
தென்னம் பாலையிலே தேன் சிதறும் வேளை வரும்
மாலை சூடும் தேதி எண்ணி பத்து விரலும் தேயும்
ஆ-ஆ-ஆ-ஆ-அ-அ-அ-அ
மாலை சூடும் தேதி எண்ணி பத்து விரலும் தேயும்
இவ இழுத்துவிடும் பெருமூச்சில் ஈரசேலை காயும்

ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு
மிச்ச விவரம் வேணுமுன்னா மச்சான போயி கேளு கேளு
ஹ-ஹ-ஹா-ஹா

வயிரப் பொடி எடுத்து வாசல் எல்லாம் கோலமிடு
வானவில் எடுத்து தோரணமாய் ஆடவிடு
மின்னல் கீத்தெடுத்து மேகம் வரை பந்தல் இடு
வெள்ளி பூப்பறிச்சி வீதி எல்லாம் சிந்திவிடு
உள்ளபோடி வெள்ளத்தாயி இன்னும் என்ன பேச்சு
வரும் வெள்ளிக்கிழமை கல்யாணம் வெத்தலை மாத்தியாச்சு

ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு
மிச்ச விவரம் வேணுமுன்னா மச்சான போயி கேளு கேளு
ஹ-ஹா

கோரம் பாய் இருக்கும் குண்டு மல்லி பூவிருக்கும்
கையில் பால் இருக்கும் கதவுக்கு தாள் இருக்கும்
கண்ணாடி வலையல் இவ கை எல்லாம் நிறைஞ்சிருக்கும்
எந்திரிச்சி பாக்கையிலே எண்ணிக்கை குறைஞ்சிருக்கும்
முதல்முதலா பாக்கும் போது அச்சமாக இருக்கும்
ஆனா விடியும் போது விளக்கில் எண்ணை மிச்சமாக இருக்கும்

ஆளானாலும் ஆளு இவ (அழுத்தமான ஆளு)
(மிச்ச விவரம் வேணுமுன்னா மச்சான போயி கேளு கேளு)
ஹ-ஹா-(மச்சான போயி கேளு கேளு)
அப்படி சொல்லு (மச்சான போயி கேளு கேளு)-ஹ-ஹா



Credits
Writer(s): R Vairamuthu, Shankar Ganesh
Lyrics powered by www.musixmatch.com

Link