Punnakkunnu - Original Motion Picture Soundtrack

புன்ணாக்குன்ணு சொன்னா கூட கவலையில்லடா
ஒரு புள்ளையத்தான் வெஞ்சிடாத அப்பன் எங்கடா
மண்ணாங்கட்டின்னு சொன்னா கூட கவலையில்லடா
என் அப்பன்தானே சொன்னான் இப்போ அதுக்கு என்னடா
நைனாசபை திட்டினாலும் கவலையில்லடா
நீ ஐநாசபை போல காதில் போட்டுக்கொள்ளேண்டா
சொந்தமுன்னா சோதனையின்னு தெரிஞ்சுகோயேண்டா
உங்கொப்பனையும் அவங்க அப்பன் மிதிச்சுருப்பாண்டா
என்ன பாத்து சொன்னா
என் கண்ண பாத்து சொன்னா
அவன் அப்பனாக இல்லையின்னா அடிச்சு நொறுக்குவேன்

புன்ணாக்குன்ணு சொன்னா கூட கவலையில்லடா
ஒரு புள்ளையத்தான் வெஞ்சிடாத அப்பன் எங்கடா
மண்ணாங்கட்டின்னு சொன்னா கூட கவலையில்லடா
என் அப்பன்தானே சொன்னான் இப்போ அதுக்கு என்னடா

ஆடி மாசம் காத்தடிச்சா அம்மி கூட பறக்கும்
அப்பனுக்கு கிறுக்கு வந்தா கண்ணு ரெண்டும் இருட்டும்
காரம் பசு கன்னுக்குட்டிய எட்டி எட்டி உதைக்கும்
வலிச்சாலும் கன்னுக்குட்டி அம்மான்னுதான் கதறும்
உன்னை ஏதும் சொன்னாக்கா உள்ளுக்குள்ள வலிக்கும்
அஞ்சி bottle ஊத்திக்கிட்டும் போதையில்ல எனக்கும்
தண்டவாளம் தடம் புரண்டா ரயிலு வண்டி சறுக்கும்
தகப்பன மதிக்கலன்னா வாழ்க்கை பூரா வழுக்கும்
என்ன பாத்து சொன்னா
என் கண்ண பாத்து சொன்னா
அவன் அப்பனாக இல்லையின்னா அடிச்சு நொறுக்குவேன்

புன்ணாக்குன்ணு சொன்னா கூட கவலையில்லடா (ஸ்லேவா)
ஒரு புள்ளையத்தான் வெஞ்சிடாத அப்பன் எங்கடா (ஸ்லோவா)
மண்ணாங்கட்டின்னு சொன்னா கூட கவலையில்லடா (ஸ்லேவா)
என் அப்பன்தானே சொன்னான் இப்போ அதுக்கு என்னடா

கள்ளுல சிறந்த கள்ளு ஒத்தமரத்துக் கள்ளு
அப்பனுங்க அப்படித்தான் மச்சான் விட்டுத்தள்ளு
வில்லுல பெரிய வில்லு அர்ஜுனரு வில்லு
சொல்லுல நல்ல சொல்லு பெத்த அப்பன் சொல்லு
Tyre'ல பெரிய tyre'ரு Lorry-யோட tyre'ரு (யப்பா)
திமிறுல பெரிய திமிரு ஒங்க அப்பன் திமிரு
எனக்கும் எங்கப்பனுக்கும் ஆயிரம்தான் இருக்கும்
தப்பா பேசுறவன் பள்ளு எல்லாம் பறக்கும்
என்ன பாத்து சொன்னா
என் கண்ண பாத்து சொன்னா
அவன் அப்பனாக இல்லையின்னா அடிச்சு நொறுக்குவேன்

தன்னானன்னே தன்னானன்னே தனன்ன நானனே
தன தன்னானன்னே தன்னானன்னே தனன்ன நானனே
மண்ணாங்கட்டின்னு சொன்னா கூட கவலையில்லடா
என் அப்பன்தானே சொன்னான் இப்போ அதுக்கு என்னடா
நைனாசபை திட்டினாலும் கவலையில்லடா
நீ ஐநாசபை போல காதில் போட்டுக்கொள்ளேண்டா
சொந்தமுன்னா சோதனையின்னு தெரிஞ்சுகோயேண்டா
உங்கொப்பனையும் அவங்க அப்பன் மிதிச்சுருப்பாண்டா
என்ன பாத்து சொன்னா
என் கண்ண பாத்து சொன்னா
அவன் அப்பனாக இல்லையின்னா அடிச்சு நொறுக்குவேன்

Credits
Writer(s): J Harris Jayaraj, N Muthu Kumaran
Lyrics powered by www.musixmatch.com

Link