Yae Thendrale

ஏ தென்றலே
இனி நாளும் பாட வா
என் வாழ்வெல்லாம்
சுபமாலை சூடவா
இளமைக் கவிதை
மனதில் இனிமை
பாடவே நீ வா
ஏ தென்றலே
இனி நாளும் பாட வா

வாழ்வென்பதே ஆராதனை
வாழ்நாளெல்லாம் உன் தேவனை
நினைத்தே இரு நெஞ்சமே
நிதமும் நலமே
நிழல் போல் உனைச் சேருமே
வளரும் சுகமே
இனிமேல் இனிமை
இனி ஏன் தனிமை

ஏ தென்றலே
இனி நாளும் பாட வா

தென்காற்றிலே சங்கீதமே
என் நெஞ்சிலே உன் பாவமே
தினமும் ஜதி போடுதே
அதில் ஓர் சுகமே
சிரிக்கும் மனம் மீதிலே
தெரியும் முகமே
ரசித்தேன் அழகை
ரசிக்கும் மனதை

ஏ தென்றலே
இனி நாளும் பாட வா
என் வாழ்வெல்லாம்
சுபமாலை சூடவா
இளமைக் கவிதை
மனதில் இனிமை
பாடவே நீ வா

ஏ தென்றலே
இனி நாளும் பாட வா



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link