Ore Oru Vaanam

ஒரே ஒரு வானம்
ஒரே ஒரு பூமி
ஒரே ஒரு வாழ்க்கை
அது நீதான்
ஒரே ஒரு வாழ்க்கை
அது நீதான்
ஒரே ஒரு வானம்
ஒரே ஒரு பூமி
ஒரே ஒரு வாழ்க்கை
அது நீதான்
ஒரே ஒரு வாழ்க்கை
அது நீதான்
அட போடா கருப்பழகா
வெள்ளந்தி சிரிப்பழகா
ஆயிரம் தலைமுறைக்கும்
பூப்பேன் உனக்கழகா
ஒரே ஒரு வானம்
ஒரே ஒரு பூமி
ஒரே ஒரு வாழ்க்கை
அது நீதான்
ஒரே ஒரு வாழ்க்கை
அது நீதான்
தூண்டிலில புழுவாக
துளித் துளியா துடிச்சேனடா
வரமாக வந்து என்னில்
சேர்ந்தாயடா
கைவிரல புடிச்சுக்கிட்டே
காலங்கள கடந்துருவேன்
கடவுளையே வணங்குவத
மறந்துருவேன்
வலியும் இல்லாமலே
காயமா காயமா
வயசுப் பெண் மனசு
மாயமா மாயமா
உன்னக் கைசேரவே
மாசமா வருஷமா
ஒரே ஒரு வானம்
ஒரே ஒரு பூமி
என்ன இது அதிசயமோ
காதல் செய்த கரிசனமோ
மணப் பெண்ணாய்
இன்று நானும் ஆனேனடா
வெட்கத்துல நனைஞ்சுக்கிறேன்
வெத்தலையா சிவந்துக்கிறேன்
கூந்தலுல உன் உறவ
முடிஞ்சுக்குறேன்
நிமிஷம் ஒரு சேலையா
மாத்துறேன் மயங்குறேன்
மாலை மாத்தாமலே
மணவிழா பாக்குறேன்
அரிசிப் பானை உள்ள
ஆசைய ஒழிக்குறேன்
ஒரே ஒரு வானம்
ஒரே ஒரு பூமி
ஒரே ஒரு வாழ்க்கை
அது நீதான்
ஒரே ஒரு வாழ்க்கை
அது நீதான்



Credits
Writer(s): P S Ramnath, Jeevan Mayil
Lyrics powered by www.musixmatch.com

Link