Ethu Kuzhanthai (From "Oruthalai Raagam")

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம்

நடைமறந்த கால்கள் தன்னின் தடயத்தை பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்

வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்

உளமறிந்த பின் தானோ அவளை நான் நினைத்தது
உறவுருவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவை கொண்டு கவிதை நான் வடிப்பது
உயிரிழந்த கருவை கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒரு தலையை காதலிலே எத்தனை நாள் வாழ்வது

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம்



Credits
Writer(s): T. Rajendar
Lyrics powered by www.musixmatch.com

Link