Eerakkaathae (From "Idam Porul Yaeval")

ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து
மலங்காடு மயிலே மாசம் உள்ள முயலே
முள்ளு மேல துணி காய போடுற
தஞ்சம் வந்து கெடக்கேன்
தப்பி வந்து பொழக்கேன்
துன்பத்துக்கு வாக்க பட பாக்குற
பாசத்த உள்ள வச்சு ஒரு பாசாங்கு பண்ணாதீங்க
மண்ணுக்குள் நூல் கோல் போல
என்ன கண்ணுக்குள் மூடாதீங்க
ஓ மழையில் ஒதுங்க தானே
நான் இரவில் பனியா வந்தேன்
பனிய குடிக்க தானே நீ பகலில் வெயிலா வந்தே
ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
கூடு குள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து

செஞ்சு வச்ச கல்லானேன்
உன்னால சேல கட்டும் பொன்னானேன்
என் சேல அழுக்காக வா உள் கூடு வேர்வை பூக்க வா நீ வா
ஆம்பளக்கி சேல கட்டி வந்தாக்க பொம்பளான்னு நம்பனுமா
சொல்லாம வழி பார்த்து போ
கொண்டாட வாழ்க்கை இல்ல போடி போ
அட உசிரே உள் வாங்கும் காத்து தான்
என் கூந்தல் போர்வை ஆகுமே
ஆட்டு தோலு என் போர்வை ஆகலாம்
வெள்ளாடு போர்வை ஆகுமா
செல்ல கருப்பா எந்த கொழுப்பா உண்ம சொல்லு

உண்ணிப்பூச்சி எப்போதும் காம்போட ஒட்டி கிட்டா
போகாது என் உசிர உருஞ்சாதடி
என் பொழப்பில் ஈரம் இல்ல போடி
சீக்கு பட்ட எல் போல சும்மா நீ
நோக்கு பட்டு போகாத
என் பேச்ச நீ கேளையா
என் தோளில் தேமல் பாத்து போய்யா
ஒரு தலையே இல்லாத பூச்சி நான் நீ கிரீடம் சூட பாக்குற
தன் தலைய மண்னோட மூடுர தீ கோழி போல ஏய்க்கிற
என்ன மடக்க மார்பில்இடுக்க பாக்குறியா
ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
கூட்டு குள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து



Credits
Writer(s): Vairamuthu, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link