Kannadi Poovukku

கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல
உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல
மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல
உன்னால கண் தூங்கல

நீ தீ போல் பூச்செடி
போனதே என் மூச்சடி
உன்னால் தானடி
மனம் ஊஞ்சலாய் ஆடும் தேரடி

காதல் கண்ணுக்குள்ளே எட்டு போட
மின்னல் நெஞ்சுக்குள்ளே மெட்டு போட
பூமி பந்து போலே உந்தன் நியாபகம்
காதல் தான் சுத்துதே

உன்ன பார்த்தா உச்சி கொட்டி போவேன்
பச்ச புள்ள ஆவேன்
அச்சு வெல்லம் நீதானே

என்ன கேட்டா காதல் சொல்ல மாட்டா
ராஜா ராணி சீட்டா
நெஞ்ச குலுக்கி போட்டாலே

குதிக்குறேன் பறக்குறேன் பறவை போல நான்
இப்ப தரையிலும் மிதக்குறேன் குழந்தை போல நான்

உருகுறேன் கரையுறேன்
மெழுக போல நான்
உன்ன இரவிலும் தொடருவேன்
நிழல்ல போல நான்

கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல
உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல
மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல
உன்னால கண் தூங்கல

நான் யாரோடு பேச
நீ இல்லாமலே
நான் யாரோடு யாரோ
நீ சொல்லாமலே

உள்ளுக்குள்ளே காதல் உண்டானதே
ஊருக்கும் நட்புக்கும் தெரியாமலே
கையேடு தான் கைகள் சேரும் வரை
கண்ணாலே நாம் பேசலாம்

குதிக்குறேன் பறக்குறேன் பறவை போல நான்
இப்ப தரையிலும் மிதக்குறேன் குழந்தை போல நான்

உருகுறேன் கரையுறேன்
மெழுக போல நான்
உன்ன இரவிலும் தொடருவேன்
நிழல்ல போல நான்

கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல
உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல
மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல
உன்னால கண் தூங்கல

நீ தீ போல் பூச்செடி
போனதே என் மூச்சடி
உன்னால் தானடி
மனம் ஊஞ்சலாய் ஆடும் தேரடி



Credits
Writer(s): Kabilan Vairamuthu, Santhosh Dhayanidhi
Lyrics powered by www.musixmatch.com

Link