Unnarugil Varugaiyil

உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்
உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம்
உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்
உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம்

உன் பெயரைக் கேட்கையில் உற்சாகம் துளிர் விடுதே
உன் நிழலை தேடியே என் நிழலும் தொடருது இன்று
எப்போது மாறினேன் என்னை நான் மீறினேன்
என் நெஞ்சைக் கேட்கிறேன் பதில் சொல்லிடவில்லை

உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்
உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம்
உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்
உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம்

உன் கண்கள் மீது ஒரு பூட்டுவைத்துப் பூட்டும் போதும் (போதும் போதும் போதும்)
உன் இதயம் தாண்டி வெளியே வருமே பெண்ணே (பெண்ணே! பெண்ணே! பெண்ணே!)
நீ பயணம் போகும் பாதை வேண்டாமென்று சொல்லும் போதும் (போதும் போதும் போதும்)
உன் கால்கள் வருமே வருவதை தடுத்திட முடியாதே
தனனா தனனா தனனனனா தன தனனா தனனா தனனனனா...
தனனா தனனா தனனனனா தன தனனனா தனனனா தனனனா...

என்னுடல் என் மனம் என் குணம் எல்லாம்
இன்று புதிதாக உருமாறும்
நண்பர்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம்
காதில் நுழையாமல் வெளியேறும்

இது அன்பால் வருகிற அவஸ்தைகளா
இல்லை உன் மேல் வருகிற ஆசைகளா
இதுவரை சேர்த்த இன்பம் துன்பங்களை
உன்னுடன் பகிர்ந்திட துடிக்கிறேன்
இது என்ன இது என்ன புது மயக்கம்
இரவோடும் பகலோடும் என்னை எரிக்கும்

கனவினில் தினம் தினம் பூத்திடும் பூக்களை
கைகளில் பறித்திட ஒளிந்திடுமா
எதிரினில் பேசிட தயங்கிடும் வார்த்தைகள்
சொன்னால் அது புரிந்திடுமா

கடவுளின் இருப்பிடம் காதலின் ரகசியம்
இரண்டையும் அறிந்திட முடிந்திடுமா
இடம் பொருள் ஏவலும் இதயத்தின் காவலும்
இன்றே மெல்ல மீறிடுமா

உன் கண்கள் பார்க்கும் திசையோடு
காரணமின்றி தெரிகின்றேன்
உந்தன் பார்வை எந்தன் மீது விழ
ஏனோ நானும் காத்திருப்பேன்

வெளியே சொன்னா ரகசியமாய்
என் நெஞ்சில் உறுத்துகிறாய் நீயே
சொல்லாமல் நான் மறைத்தாலும்
என் கண்ணின் மணிகள் என்னைக் காட்டி விடும்
தனனா தான தா தனனான நானனனா
தனனா தான தா தனனான நானனனா
தனனா தான தா தனனான நானனனா
தனனா தான தா தனனான நானனனா
தனனா தான தா தனனான நானனனா
தனனா தான தா தனனான நானனனா
தனனா தான தா



Credits
Writer(s): Muthukumar Na, Joshua Sridhar
Lyrics powered by www.musixmatch.com

Link