Kanne Un Kadhal (From "Idhu Namma Aalu")

கண்ணே உன் காதல் படுத்துதடி
ஐய்யய்யோ பேயாய்த் துரத்துதடி
உன் வாசம் என்னை அடிக்குதடி
ஓயாமல் அசைக்குதே
உள்ளத்தை உலுக்குதே

பார்வையினாலே கண்ணே
நீ ஆணியும் அடித்தாயே
கண்ணாடிப் போல் என்னை உடைத்தாயே
பொன்னான இதயம்
உன்னோடு சேர்ந்தே துடிக்கிறதே

போகிற போக்கில் பெண்ணே நீ
ஆசையை விதைத்தாயே
வேரோடு என்னையும் பறித்தாயே
பொல்லாத பருவம் என் மீது
போரைத் தொடுக்கிறதே

பெண்ணே உன்ன பாத்து பாத்து
மனம் தாளாய் பறக்கிறதே
உன் மனசத்தான் கேட்டுக் கேட்டு
அது வேகம் எடுக்கிறதே

என் கண்கள் உன்னைத்
தேடித் தேடித் தினம்
தேனாய் சுரக்கிறதே
தாய்மொழியும் கசக்குதே
தூங்கிடவும் மறக்குதே

அடியே உன் அசைவினிலே
நல்ல நாளைப் பார்க்கிறேன்
துணையே உன் தேடுதலில்
என் தாயைப் பார்க்கிறேன்

சிலையே உன் இமைகளிலே
சினிமாவும் பார்க்கிறேன்
பச்சைத்தமிழன் இவன்
உந்தன் மொழிகளிலேதான்
சொர்க்கம் பார்க்கிறேன்

சின்னக் குழந்தைபோல்
உன்னைப் பார்த்தே சிரிக்கிறேன்
உந்தன் ஒரு பார்வைத் தீண்ட
கல் அணையுமே கரையுமே சூடம்போல

பெண்ணே உன்னப் பாத்து பாத்து
மனம் தாளாய் பறக்கிறதே
உன் மனசத்தான் கேட்டுக் கேட்டு
அது வேகம் எடுக்கிறதே

என் கண்கள் உன்னைத்
தேடித் தேடித் தினம்
தேனாய் சுரக்கிறதே
தாய்மொழியும் கசக்குதே
தூங்கிடவும் மறக்குதே

Baby girl this song is for you
Straight from the bottom of my heart
Take care
I love you



Credits
Writer(s): Yugabharathi, T.r. Kuralarasan
Lyrics powered by www.musixmatch.com

Link