Vellai Kanavu

வெள்ளை கனவு ஒன்று
உள்ளே நுழைந்தது
கண்கள் இருளுதடி

என் மொத்த புலன்களும்
மெல்ல எழுந்து வந்து
ஏதோ சொல்லுதடி

அடி பெண்ணே பெண்ணே பெண்ணே
கண் முன்னே தேவதை உயிர்
எங்கும் பெரும் வதை

பேசி தீர்த்த பின்னும்
பேச வார்த்தை இன்னும் தேடுதே
இனி பேச ஏதும் இன்றி
கேட்க ஏதும் இன்றி தொடருதே

அடி பெண்ணே பெண்ணே பெண்ணே
கண் முன்னே தேவதை
உயிர் எங்கும் பெரும் வதை

வெள்ளை கனவு ஒன்று
உள்ளே நுழைந்தது
கண்கள் இருளுதடி

என் மொத்த புலன்களும்
மெல்ல எழுந்து வந்து
ஏதோ சொல்லுதடி

மயக்கும் பார்வையில்
பாதை மறந்தும் இந்த
பயணம் தொடருதடி

உன் மந்திர புன்னகையில்
என் மனம் சொக்கி சொக்கி
ஸ்வர்கம் தெரியுதடி

புத்தம் புது மழை
என்னை நனைத்தது
நெஞ்சம் மட்டும் வேர்க்கும்
மாயம் என்ன

நித்தம் இந்த மழை
என்னை நனைத்திட
ஏனோ உள்ளம் ஏங்கும்
நியாயம் என்ன

இரு கரங்கள் இடையே இருக்க
இதமாகுதே
நீ விழுங்கும் சொற்கள்
காதின் ஓரம் கனமாகுதே
அடி பெண்ணே பெண்ணே பெண்ணே

கண் முன்னே தேவதை
உயிர் எங்கும் பெரும் வதை
உன் மூச்சு காற்று பட்டு
ரோம கூட்டம் மொத்தம் சிலிர்க்குதே
உன் தேக சூட்டில்
எந்தன் உதடு கொஞ்சம் முத்தம் உதிர்க்குதே

வெள்ளை கனவு ஒன்று
உள்ளே நுழைந்தது
கண்கள் இருளுதடி

என் மொத்த புலன்களும்
மெல்ல எழுந்து வந்து
ஏதோ சொல்லுதடி

அடி பெண்ணே
அடி பெண்ணே
அடி பெண்ணே
அடி பெண்ணே
ஆஹா ஆஆஆ ஆஆ ஆஆ



Credits
Writer(s): Sam C.s., Ranjit Jeyakodi
Lyrics powered by www.musixmatch.com

Link