Maayavi Penne

மாயாவி பெண்ணே அடி மாயாவி பெண்ணே
மாயங்கள் செய்து தாக்காதடி
மேதாவி பெண்ணே அடி மேதாவி பெண்ணே
மேடாக என்னை தேய்க்காதடி
நில் என்று சொன்னாலும் கால் போகுதே
ஏன் என்று கேட்காமல் நாள் போகுதே

காதல் வருதே காதல் வருதே
என்னை எதுவும் கேட்கவே இல்லையே
காய்ச்சல் வருதே காய்ச்சல் வருதே
எந்தன் இதயம் கேட்குதே உன்னையே

நான் என்ன சொல்ல உன் பின்னே செல்ல
ஆசைகள் என்னை ஆட்டிவைக்குதே
உன் காதில் சொல்ல யார் முன்னே செல்ல
வார்த்தைகள் எல்லாம் பூட்டிவைக்குதே

ஏராளமாய் வார்த்தைகள் உள்ளே
என் மௌனமாய் நிக்கிறேன்
தோறாயமாய் தோன்றிய சொல்லை
நான் பேசியே வைக்கிறேன்

காதல் வருதே காதல் வருதே
என்னை எதுவும் கேட்கவே இல்லையே
காய்ச்சல் வருதே காய்ச்சல் வருதே
எந்தன் இதயம் கேட்குதே உன்னையே

ஏன் இந்த பேச்சில் ஆனந்த கூச்சல்
ஆகாய நீச்சல் நான் அடிக்கிறேன்
நீ சொன்ன வாக்கில் கால் போன போக்கில்
கண் கட்டி காட்டில் நான் நடக்கிறேன்
காணமலே போகிறேன் நானும் உன் கண்களை நம்பியே
சாகாமலே வாழ்கிறேன் நானும் உன் நெஞ்சிலே தங்கியே

காதல் வருதே காதல் வருதே
என்னை எதுவும் கேட்கவே இல்லையே
காய்ச்சல் வருதே காய்ச்சல் வருதே
எந்தன் இதயம் கேட்குதே உன்னையே

மாயாவி பெண்ணே அடி மாயாவி பெண்ணே
மாயங்கள் செய்து தக்கதாகடி
மேதாவி பெண்ணே அடி மேதாவி பெண்ணே
மேடாக என்னை தேய்க்காதடி
நில் என்று சொன்னாலும் கால் போகுதே
ஏன் என்று கேட்காமல் நாள் போகுதே

காதல் வருதே காதல் வருதே
என்னை எதுவும் கேட்கவே இல்லையே
காய்ச்சல் வருதே காய்ச்சல் வருதே
எந்தன் இதயம் கேட்குதே உன்னையே



Credits
Writer(s): Mani Amudhavan, Prasaad Y R
Lyrics powered by www.musixmatch.com

Link