Selai Kattum

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன்

வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

ஓ... கூந்தலுகுள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
ஆ... ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்

ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா?
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா?
இது போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன்

ஓ... காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
ஓ... மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ

மீனுக்குத் தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது
இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன்

வானத்து இந்திரரே, வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்

இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை



Credits
Writer(s): Vairamuthu, Hamsalekha
Lyrics powered by www.musixmatch.com

Link