Kanneerai Pole

கண்ணீரை போலே வேறு நண்பன் இல்லை
காற்றுக்குள் துன்பம் போலே பாடம் இல்லை

உன் நெஞ்சின் சோகம் எல்லாம் கேட்டுகொள்ள
உனக்கு இங்கே உன்னை தவிரை யாரும் இல்லை
பணம் ஒன்றே எப்போதும் வாழ்க்கை இல்லை
புறிந்தாலே இதயத்தில் துயரம் இல்லை

கண்ணீரை போலே வேறு நண்பன் இல்லை
காற்றுகுள் துன்பம் போலே பாடம் இல்லை

ஒரு அலை மீது போகும்
இலை போல தானே
உலகில் மனிதன் வாழ்க்கை
போகும் வரை போவோம் நாமே

அதில் அகங்காரம் என்ன
அதிகாரம் என்ன
அன்பின் வழியில் சென்றால்
கரை சென்று சேர்வோம் நாமே

கவலை இன்றி உலகத்திலே மனிதன் யாரும் கிடையாது
தவளை தாண்டி போவதனால்
தாமரை பூக்கள் உடையாது
வாழ்க்கை என்னும் கத்தியினை
காயத்தோடு தொட்டுப்பார்
காலம் போட காயம் எல்லாம் மாயமாய் மரையும் பார்

கண்ணீரை போலே வேறு நண்பன் இல்லை
காற்றுக்குள் துன்பம் போலே பாடம் இல்லை

தாய் கருவோடு வாழ்ந்த
அந்நாளில் தானே
கவலை எதும் இன்றி
கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே
பின் காசோடு கொஞ்சம்
கனவோடு கொஞ்சம்
நம்மை நாமே இன்று தேடித்தான் தொலைகின்றோமே

வழியில் நீயும் வளையாமல் மலையில் ஏற முடியாதே
வலிகள் எதும் இல்லாமல்
வாழ்க்கை இங்கே கிடையாதே
வாசல் தாண்டி போகாமல்
வானம் கண்ணில் தெரியாதே
காசும் பணமும் எப்போதும்
வானல் நீராய் மறைந்திடுமே

கண்ணீரை போலே வேறு நண்பன் இல்லை
காற்றுக்குள் துன்பம் போலே பாடம் இல்லை

உன் நெஞ்சின் சோகம் எல்லாம் கேட்டுகொள்ள
உனக்கு இங்கே உன்னை தவிரை யாரும் இல்லை
பணம் ஒன்றே எப்போதும் வாழ்க்கை இல்லை
புறிந்தாலே இதயத்தில் துயரம் இல்லை



Credits
Writer(s): Vijay Antony, Muthukumar N
Lyrics powered by www.musixmatch.com

Link