Uchimalai Azhagu

தந்தான நானே
ஏ தந்தான நானே
ஏ தந்தான தந்தான தந்தான நானே
ஏ தந்தான தந்தான தந்தான தந் தானே

ஏ தந்தான நானே
ஏ தந்தான நானே
ஏ தந்தான தந்தான தந்தான தந்தான நா
ஏ தந்தான தந்தான தந்தான தந்தான நானே

ஹேய் உச்சி மலை அழகு ஆதாரமா உள்ளவர
இந்த ஊரு ஒலகமே செழித்து வாழ இல்ல கொற
பச்ச செடி கொடிங்க பழகி பேசி அள்ளித்தர
நாங்க கைய ஏந்தித்தான் பொழைக்கமாட்டோம் போகும்வர

காசு பணம் சொத்து சொகம்
போயிடும் தொலைஞ்சிதான்
நம்ம காக்கும் இந்த காட்ட நம்பி
வாழ்வோமே துணிஞ்சிதான்

காசு பணம் சொத்து சொகம்
போயிடும் தொலைஞ்சிதான்
நம்ம காக்கும் இந்த காட்ட நம்பி
வாழ்வோமே துணிஞ்சிதான்

உச்சி மலை அழகு ஆதாரமா உள்ளவர
இந்த ஊரு ஒலகமே செழித்து வாழ இல்ல கொற

பாம்பு தோளு பல்லி கூட பாசங்காட்டி தள்ளி ஓட
கூடி வாழும் இந்த வாழ்வ கொண்டாடுவோம்
குறை இல்லாமலே நாளும் பொழுதும் பண்பாடுவோம்

கருவுல நம்ம சொமந்தவ
இரக்கி விடுரா வெளியில
உசுரது போகும்வரையில
தாங்குது காடு மடியில

ஓட நீரில் தாவும் மீன
ஒன்னா சேந்து கொம்பு தேன
பங்குபோடும் எங்க கூட்டம் ஜோரானதே

வழி மாறாமலே போகும் திசையோ நேரானது
இருப்பத எல்லாம் கொடுக்குற காடா
இறைவன் இருக்குறான்
அடிக்குற காத்துல அசஞ்சிதான்
அழகா அவனும் சிரிக்கிறான்

தந்தான தானே
ஏ தந்தான நானே
ஏ தந்தான தந்தான தந்தான நானே
ஏ தந்தான தந்தான தந்தான தந்தான நானே

காடன காடு காயாத ஆறு
வித வைக்காம வெள்ளாமை பண்ணாம திம்போமே சோறு
மலை தாயோட அன்பால எல்லாமே கை சேரும் பாரு



Credits
Writer(s): Yugabharathi, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link