Sandalee

சண்டாளி உன் அசத்துற அழகுல லேசாகி
என் அந்திப்பகல் அத்தனையும் லூஸாகி
பய கெடக்குறேன் தரையில piece ஆகி

சண்டாளி உன் சிரிப்புல பறக்குறேன் தூசாகி
நான் செவத்துல விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன் நினைப்புல மாசாகி

கையும் காலும் உன்ன கண்டு ஓடவில்லடி
ரா வந்தும்கூட கண்ணு இரண்டும் மூடவில்லடி
பாவி புள்ள என்ன நீயும் ஆடவிட்டடி
தாய் பாசத்தோட நெஞ்ச வந்து மோதிபுட்டடி
தெரியலடி புரியலடி உன் இருவிழி மனுஷன இடுப்புல தூக்குதடி

சண்டாளி உன் அசத்துற அழகுல லேசாகி
என் அந்திப்பகல் அத்தனையும் லூஸாகி
பய கெடக்குறேன் தரையில piece ஆகி

சண்டாளி உன் சிரிப்புல பறக்குறேன் தூசாகி
நான் செவத்துல விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன் நினைப்புல மாசாகி

முன்னால நீ வந்தா இவன் முக்கா மொழம் பூவாகுறேன்
சொல்லாம நீ போனா இவன் பல்லாங்குழி காயாகுறேன்

அப்புராணி உன்னப் பாத்து அம்மி வச்ச தேங்கா சில்லா நசுக்கிப் புட்டேன்
மொத்தமா நீ என்ன சேர நித்தம் நினைப்பு குள்ள கசங்கிப் புட்டேன்

சொட்ட வால குட்டி நானும் சோறு திங்கல
நீ தொட்டுப் பேச ரெண்டு நாளா வீடு தங்கல
முட்டிமோதும் உன் நினைப்பு ரீலு சுத்தல
நீ எட்டிப் போவ செத்து போவேன் காது குத்தல
கத விடல, கலங்கிடல
நான் உன்ன விட ஒருத்திய இதுவர பாத்திடல

சண்டாளி உன் அசத்துற அழகுல லேசாகி
என் அந்திப்பகல் அத்தனையும் லூஸாகி
பய கெடக்குறேன் தரையில piece ஆகி

சண்டாளி உன் சிரிப்புல பறக்குறேன் தூசாகி
நான் செவத்துல விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன் நினைப்புல மாசாகி

கட்டான் தரை ஒன்னாலதான் கம்மாக் கர நீராகுரேன்
செந்தாமரை கண்ணால நான் பொங்காமலே சோறாகுறேன்

நொங்குபோல என்ன சீவும், கண்ணுக்குள்ள கட்டி போட்டு அடிச்சுப்புட்ட
உச்சி வானா நின்ன ஆள ஒரே ஒதட்டசைப்பில் உலுக்கி புட்ட

அல்லி ராணி என்ன ஏன்டி ஆட்டி வைக்கிற
உன் அன்பில் என்ன சாவிக் கொத்தா மாட்டி வைக்கிற
புள்ளி மான செக்கு மாடா மாத்தி வைக்கிற
நீ வெள்ளி காசா என்ன ஏனோ சேத்துவைக்குற

பழம் விடுற, பழகிடுற
என் பகலையும் இரவையும் படையுலு போட்டுடுற

சண்டாளி உன் அசத்துற அழகுல லேசாகி
என் அந்திப்பகல் அத்தனையும் லூஸாகி
பய கெடக்குறேன் தரையில piece ஆகி

சண்டாளி உன் சிரிப்புல பறக்குறேன் தூசாகி
நான் செவத்துல விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன் நினைப்புல மாசாகி



Credits
Writer(s): G. V. Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link