Kanmani

கண்மணி மெய்யான காதல் நீதானே
என் வாழ்விலே
சத்தம் நான் உன்னாலே சாந்தம் ஆனேனே
இந்நாளிலே

கண்மணி மெய்யான காதல் நீதானே
என் வாழ்விலே
சத்தம் நான் உன்னாலே சாந்தம் ஆனேனே
இந்நாளிலே

கோடி கோடி
ஆண்டு நானும் ஏங்கி
வாங்கி வந்த சுகமோ
தேடி தேடி ஓய்ந்து
போன போது தெய்வம்
தந்த வரமோ

நடு நெஞ்சினிலே
ஒளி வந்ததடி உன்னை
நீங்கினால் உயிர் ஏதடி

கண்மணி மெய்யான காதல் நீதானே
என் வாழ்விலே
சத்தம் நான் உன்னாலே சாந்தம் ஆனேனே
இந்நாளிலே

ஏமாற்றும் ஆளாய் முன் இருந்தேன்
ஏதேதோ வேஷம் கொண்டிருந்தேன்
பாவம் நானாக
உன் வருகையில் பாதை
நேராக

நல்லதை காட்ட அன்பே நீ
வந்தவுடன் கண்ணிமை
மூடாமல் வேர்த்தேனே
சல்லடை போட்ட உன்
வார்த்தை உள்ளம் தொட
போட்டாலும் பூ பூக்க பார்த்தேனே

உள்ளத்தை
நான் சொல்லவா
உண்மையே
நீ அல்லவா

கண்மணி மெய்யான காதல் நீதானே
என் வாழ்விலே
சத்தம் நான் உன்னாலே சாந்தம் ஆனேனே
இந்நாளிலே

தாய்போல நீயும் உள்ளிருந்து
தாலாட்டும் போது
மெய் மறந்து கேட்டேன்
ஆராரோ உன் உயிரினை
சேரும் நான் வேரோ

எத்தனை மோசம்
என்றே என் செய்கைகளை
சொல்லியும் காட்டாமல் சேர்ந்தாயே
அத்தனை பாசம் உன் மீது உள்ளதென
அன்பெனும் ஆறாக பாய்ந்தாயே

நன்மையே
நீ தந்தது
நன்றியா
நான் சொல்வது

கண்மணி மெய்யான காதல் நீதானே
என் வாழ்விலே
சத்தம் நான் உன்னாலே சாந்தம் ஆனேனே
இந்நாளிலே

கோடி கோடி ஆண்டு நானும் ஏங்கி
வாங்கி வந்த சுகமோ
தேடி தேடி
ஓய்ந்து போன போது
தெய்வம் தந்த வரமோ

நடு நெஞ்சினிலே
ஒளி வந்ததடி
உன்னை நீங்கினால்
உயிர் ஏதடி



Credits
Writer(s): Yugabharathi, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link