Sugam Sugame

சுகம் சுகமே
தொட தொடத்தானே
சுகம் சுகமே ஏய்
தொட தொடத்தானே

சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே
சுகம் கண்ணே
நெஞ்சில் வெட்கமா
கொஞ்ச வேண்டுமா நியாயமா

சுகம் சுகமே ஏய்
தொட தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே
சுகம் கண்ணா
இந்தப்பக்கம் வா
இன்பமல்லவா அன்பே வா
சுகம் சுகமே...

துள்ளத்துள்ள காதல்
பள்ளிகொள்ள ஆசை
தூக்கமில்லை என்றால் அது தகுமா

மோகனப் புன்னகை கண்டேன்
முத்துச்சரம் கண்டு நின்றேன்
தேன்மழை போல் என வாலிப நாள் வருமா...

சுகம் சுகமே ஏய்
தொட தொடத்தானே
சுகம் சுகமேஏ...

வஞ்சி தொடர்ந்தாலே வாசமலர் போலே
பிஞ்சு மனம் என்றால் நிலை கொள்ளுமா
செங்கதிர் செம்மல் கண்டேன்
சிந்தையில் ஆயிரம் கொண்டேன்
பஞ்சணை பால் பழம் நீ தரும் நாள் வருமா...

சுகம் சுகமே ஏய்
தொட தொடத்தானே
சுகம் சுகமே ஏ...

லலலாலலலா லலலாலலலா
லலலாலலலா லலலாலலலா லலலாலலலா

அந்தி வெயில் மாலை ஆற்றங்கரை போலே
சிந்தையில்லை என்றால் விடை வருமா
பொங்கிய தாமரை கண்டேன்
பொன்முகம் கண்டே நின்றேன்
அஞ்சுகக்கண்களில் ஆனந்த நீர் வருமா...

சுகம் சுகமே ஏய்
தொட தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே
சுகம் கண்ணே
இந்தப்பக்கம் வா
இன்பமல்லவா அன்பே வா
சுகம் சுகமே ஏ...



Credits
Writer(s): Ilaiyaraaja, Puratchi Dasan
Lyrics powered by www.musixmatch.com

Link