Pookara Pookara

பெண்ணுக்கொரு பேரின்பம் இங்கிங்கே
கண்ணாளா வாழ்ந்திடு அங்கங்கே
வாழ்ந்திடு அங்கங்கே
வெக்கங்கள் வளைந்தது பார் இங்கே
வெக்கத்தால் தொடைத்திடு வா இங்கே
வெக்கங்கள் வளைந்தது பார் இங்கே
வெக்கத்தால் தொடைத்திடு வா இங்கே

பூக்காரா
ஹு ஹு ஹு
ஹே பூக்காரா
ஹு ஹு ஹு
என் பூக்கள் மொத்தம்
எத்தனை சொல்லி விடு

எண்ணிக்கை
ஹு ஹு ஹு
குறையாமல்
ஹு ஹு ஹு
நீ எல்லாம் பூவை
ஒரு முறை கிள்ளி விடு

பூங்கொடிக்கு கட்டு பட்டு
பட்டு கட்டும் மொட்டு கூட்டம்
பூப்பதென்ன ஒரு முறை தான் தான் தான் தான்

பூப்படைந்து பின்னும் கூட
மீண்டும் மீண்டும் பூக்கும் பூக்கள்
பெண்கள் பெண்கள் பெண்கள் மட்டும் தான்

பூக்காரி
ஹு ஹு ஹு
ஹே பூக்காரி
ஹு ஹு ஹு
உன் பூக்கள் மொத்தம்
எத்தனை தெரியவில்லை

பூ கூடை
ஹு ஹு ஹு
பாராமல்
ஹு ஹு ஹு
உன் பூக்கள் எண்ணி
சொல்வது சுலபம் இல்லை

மின்னல் பாம்பே கையில் சுற்றும்
உள்ளம் கொண்டவள் நான்
கிளி கொஞ்சம் புலி கொஞ்சம்
கலவை நான்

காதலுக்கேது sunday monday
கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே
Made for each other என்றே என்றே
மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே

ஓ எட்டு திசையை மாற்றி போடும் கெட்டிக்காரன் நான்
சூரியனில் கூடு கட்டும் பறவை நான்

நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய்
கட்டை விரல் அசைவில் காரியம் முடிப்பாய்
இளமையினாலே இமயத்தை உடைப்பாய்
வளைவுகளாலே வானத்தை வளைப்பாய்

பதினெட்டு வருடம்
காய்ந்துள்ள நிலத்தில்
பருவமே மழை பொழிக

ஓஹோ பன்னிரண்டு
மாதம் இரவுகள் செய்து
பள்ளியறை சுகம் பெருக

ஓஓஓ ஓஓஓ
பூக்காரா
ஹு ஹு ஹு
ஹே பூக்காரா
ஹு ஹு ஹு
என் பூக்கள் மொத்தம்
எத்தனை சொல்லி விடு

எண்ணிக்கை
ஹு ஹு ஹு
குறையாமல்
ஹு ஹு ஹு
நீ எல்லாம் பூவை
ஒரு முறை கிள்ளி விடு

வெண்பா கேட்டால் பெண்பா சொல்லும்
முக்கால் கவிஞன் நான்
சந்நியாசி சம்சாரி ரெண்டும் நான்

நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய்
கட்டை விரல் அசைவில் காரியம் முடிப்பாய்
இளமையினாலே இமயத்தை உடைப்பாய்
வளைவுகளாலே வானத்தை வளைப்பாய்

ஓ வயசு பயல் மேல் மையம் கொள்ளும்
வங்க புயலும் நான்
முனிவர்களும் துருவாத
முத்தம் நான்

காதலுக்கேது sunday monday
கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே
Made for each other என்றே என்றே
மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே

காட்டுக்குள் விழுந்த மழை துளி போல
உனக்குள்ளே தொலைந்து விட்டேன்
காற்றினில் கலந்த ராகங்கள் போல
உனக்குள்ளே கரைந்து விட்டேன்

பூக்காரி
ஹு ஹு ஹு
ஹே பூக்காரி
ஹு ஹு ஹு
உன் பூக்கள் மொத்தம்
எத்தனை தெரியவில்லை

பூ கூடை
ஹு ஹு ஹு
பாராமல்
ஹு ஹு ஹு
உன் பூக்கள் எண்ணி
சொல்வது சுலபம் இல்லை

பூவாய் மாறி தேகத்துக்குள்
பூவில்லாத பாகம் ஏது
சொன்னவர்கள் கண்டதில்லையே யே யே யே யே

காலை நேர பூக்கள் வேறு
மாலை நேர பூக்கள் வேறு
கண்டவர்கள் சொன்னதில்லையே



Credits
Writer(s): Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link