Ithuvarai Naan (Male)

உனக்கென்னடி உனக்கென்னடி
என் உயிர் தான் தடுமாறுதே
இனி என்னடி இனி என்னடி
கேள்விகள் ஆயிரம் சூழுதே
முன்னில்லா ஏதோ ஒன்று
என்னை தாக்கும் இந்நேரம்
ஏதேதோ ஆனதே என் காதல் போனதே
நேற்றிந்த சோகம் இல்லை
இன்று என்ன ஆனதென்று சொல்லு

இதுவரை நான் இது போல் இல்லை
இனி என்ன நான் செய்வேன் என்னை
தினம் சிரித்தாய் நிஜமா இல்லை
என்னை ஒடித்தாய் நிம்மதி இல்லை
யார் என்ன செய்தார் உன்னை
பொய் சொல்லி வென்றாய் என்னை
நீ நீ நீ நீ

முழுவதுமாய் உன்னை நினைத்தேன்
என்னை மறந்தாய் உயிர் துடித்தேன்

விதி அறியாமலே விழிகளில் விழுந்த நான் (ஓ-ஓ)
உன் சதி தாளாமலே நாளெல்லாம் உடைகிறேன்
திசை தெரியாமலே வழிகளை தொலைத்த நான் (ஓ-ஓ)
மனம் ஆறாமலே என்னுள்ளே தவிக்கிறேன்

போதும் பொய்கள் போதும்
போதும் வஞ்சம் போதும்
போதும் வாழ்க்கை போதும் போ போ நீ போ

முழுவதுமாய் உன்னை நினைத்தேன்
என்னை மறந்தாய் உயிர் துடித்தேன்

நீ இல்லாமலே எதுவரை செல்வது (ஓ-ஓ)
உனை எண்ணாமலே எப்படி வாழ்வது
விழி சேராமலே விலகியா போவது (ஓ-ஓ)
என் விரல் கோர்க்காமலே தள்ளியா நிற்பது

ஏனோ வானம் மறைய
ஏனோ தாகம் நிறைய
மழையாய் என்னை சேர வா வா நீ வா

முழுவதுமாய் உன்னை நினைத்தேன்
என்னை மறந்தாய் உயிர் துடித்தேன்



Credits
Writer(s): Karthik Raja, Dhana
Lyrics powered by www.musixmatch.com

Link