Thenpaandi

வருகுதையா மறவர் படை
வானவில் சேனைத்தளம்
மறவரோட எதிராளி
மாண்டவர் கோடி லட்சம் (ஆ...)

கையிலே வீச்சருவாள்
காலிலே வீரத் தண்டை
நெத்தியில் பொட்டு வைத்து
நீல வண்ண பட்டுடுத்தி
தோளே வாளான துடியான வீரனடா (ஆ...)

தென்பாண்டிச் சிங்கமடா
தேன் தமிழ் பாடும் தங்கமடா
வரி புலியின் வர்க்கமடா
அந்த வரியோரின் சொந்தமடா

படை நடுங்கும் தோள்களடா
இந்த பகைவரின் மனமும் பதைக்குமடா
வைரம் பாஞ்ச நெஞ்சமடா
அவன் வாள் எடுத்தால் வரும் வாகையடா

(தென்பாண்டிச் சிங்கமடா)
(தேன் தமிழ் பாடும் தங்கமடா)
(வரி புலியின் வர்க்கமடா)
(அந்த வரியோரின் சொந்தமடா)

(அ... அ... ஆ... ஆ...)
(அ... அ... ஆ... ஆ...)
(அ... அ... ஆ... ஆ...)
(அ... அ... ஆ... ஆ...)

இருநூறு வருஷம் முன்னே இனம் மானம் காத்தவன்டா
வெள்ளை இருட்டை வெளியே விரட்டி அடிச்சவன்டா
(இருநூறு வருஷம் முன்னே இனம் மானம் காத்தவன்டா)
(வெள்ளை இருட்டை வெளியே விரட்டி அடிச்சவன்டா)

ஊம துரைக்கு தான் உற்ற நண்பனாம்
சீமை துரைகளுக்கு சிம்ம சொப்பனம்
(ஊம துரைக்கு தான் உற்ற நண்பனாம்)
(சீமை துரைகளுக்கு சிம்ம சொப்பனம்)

சிம்ம சொப்பனம் அவன் சிம்ம சொப்பனம்

(தென்பாண்டிச் சிங்கமடா)
(தேன் தமிழ் பாடும் தங்கமடா)
(வரி புலியின் வர்க்கமடா)
(அந்த வரியோரின் சொந்தமடா)

(அ... அ... ஆ... ஆ...)
(அ... அ... ஆ... ஆ...)
(அ... அ... ஆ... ஆ...)
(அ... அ... ஆ... ஆ...)

கை வளரி வீசி விட்டால் கைலாசம் கலங்குமடா
வேல் கம்பு விட்டெறிந்தால் வெண்ணிலவில் தைக்குமடா
(கை வளரி வீசி விட்டால் கைலாசம் கலங்குமடா)
(வேல் கம்பு விட்டெறிந்தால் வெண்ணிலவில் தைக்குமடா)

வானத்தை கீறி உனக்கு வைகரைய பரிசளிப்பான்
மானம் காக்கும் மறவனடா நம்ம மருது பாண்டியர் தோழனடா
(மருது பாண்டியர் தோழனடா)
(மருது பாண்டியர் தோழனடா)

தென்பாண்டிச் சிங்கமடா
தேன் தமிழ் பாடும் தங்கமடா
வரி புலியின் வர்க்கமடா
அந்த வரியோரின் சொந்தமடா

படை நடுங்கும் தோள்களடா
இந்த பகைவரின் மனமும் பதைக்குமடா
வைரம் பாஞ்ச நெஞ்சமடா
அவன் வாள் எடுத்தால் வரும் வாகையடா

(தென்பாண்டிச் சிங்கமடா)
(தேன் தமிழ் பாடும் தங்கமடா)
(வரி புலியின் வர்க்கமடா)
(அந்த வரியோரின் சொந்தமடா)

(தென்பாண்டிச் சிங்கமடா)
(தேன் தமிழ் பாடும் தங்கமடா)
(வரி புலியின் வர்க்கமடா)
(அந்த வரியோரின் சொந்தமடா)



Credits
Writer(s): Ilaiyaraaja, Karunanidhi K
Lyrics powered by www.musixmatch.com

Link