Paattu Onnu Paddu Thambhi

ஹே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே
ஹே-ஹே-ஹே-ஹே
ரு-ரு-ரு-ரு-ரு-ருரு-ரூ-ருரு

பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்

பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி
பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி

பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பியோ

வந்தார வாழவைச்சி-ஆ-சொந்தங்கள எங்க வச்சு
பூமியெங்கும் பேரெடுத்தோமே தம்பியப்போ
ஊர் முழுதும் புத்தி சொன்னோமே-ஹான்
பட்டணத்து வீதியிலே பட்டம் பெற்ற ஆணும் பெண்ணும்
இட்டிலிக்கும் தோசைக்குமா சுத்தி சுத்தி வாறாரப்பா
பாருக்குள்ளே நல்ல நாடு பாரதம் தான்னு சொல்லுங்கப்பா

பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி
பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி

வற்றாத கங்கை என்றும் வாகான பொன்னி என்றும்
கத்தாத ஆள் இல்லை அப்பா ஆனாலும்
கத்தாழை வெளயிதே யப்போ-ஹோ-ஓ
நாம் பொறந்த சீமையிலே நாம செய்ஞ்ச பாவம் இல்லே

அப்பனுக்கும் அம்மாவுக்கும் ஆசே வந்தா தோஷமப்பா-ஹான்
அப்பனுக்கும் அம்மாவுக்கும் ஆசே வந்தா தோஷமப்பா
கங்கையிலே முழுகிவிட்டு காவி கட்டி போவோமப்பா

பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி
பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி
ஹா-ஹா-ஹா-ஹா-ஹான்

ஊரெல்லாம் பிள்ளையப்பா உள்வீடு நெறையுதப்பா
கூரையிலும் தொங்குதேயப்பா இனிமேல்
கூப்பிடவே பேர் இல்லை அப்பா-ஹான்
பள்ளியிலே இடமும் இல்லே படிச்சு வந்தா வேலை இல்லே
பள்ளியறை மட்டும் சும்மா பட்டு பட்டு தெறிக்குதப்பா
ஆண்டவன் மேல் பழியபோட்டு அடிவயித்த தடவுங்கப்பா

பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பியோ
பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி

Credits
Writer(s): Kannadhasan, M.s.viswanathan M.s.viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link