Yea Nilave Yea Nilave

ஏ நிலவே ஏ நிலவே
நான் உன்னை தொட உன்னை தொட
உன்னை தொட விண்ணை அடைந்தேன்

ஏ நிலவே ஏ நிலவே
நீ விண்ணைவிட்டு மண்ணை தொட்டு
கடலுக்குள் புகுந்துவிட்டாய்

இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே

கண் ஜாடை ஆமம் என்றது
கை ஜாடை இல்லை என்றது
பசும் பூங்கொடி நிஜம் என்னடி?
இது வாழ்வா, சாவா?
எதை நீ தருவாய் பெண்ணே?

ஏ நிலவே ஏ நிலவே
நான் உன்னை தொட உன்னை தொட
உன்னை தொட விண்ணை அடைந்தேன்

நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டதே
என் நிழலில் இருந்து ரத்தம் கசிகின்றதே...

ஒரு சொல் ஒரு சொல் ஒரு சொல் சொன்னால்
உயிரே ஊரிவிடும்
அடியே அடியே முடியாது என்றால்
இதயம் கீறிவிடும்

நிலா... நீயல்லவா...
தேய்பவன் நானல்லவா
காரணம் நான் சொல்லவா?

கால்கள் இல்லாமலே
காற்றில் நடை போடலாம்
நீயும் இல்லாமலே
நாட்கள் நடை போடுமா?

இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே

கண் ஜாடை ஆமம் என்றது
கை ஜாடை இல்லை என்றது
பசும் பூங்கொடி நிஜம் என்னடி
இது வாழ்வா, சாவா?
எதை நீ தருவாய் பெண்ணே?



Credits
Writer(s): Deva, Na.muthu Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link