Dhinam Dhinam

தினம் தினம் நான் சாகிறேன்
பயத்தினிலே வாழ்கிறேன்
வலியுடன் நான் போகிறேன்
இருள் மட்டுமே பார்க்கிறேன்

எங்கே போனால் என் நோய் போகும்
அங்கே போகும் பாதை வேண்டும்
எங்கே போனால் கண்கள் தூங்கும்
அங்கே வாழும் வாழ்க்கை வேண்டும்

தினம் தினம் நான் சாகிறேன்
பயத்தினிலே வாழ்கிறேன்
வலியுடன் நான் போகிறேன்
இருள் மட்டுமே பார்க்கிறேன்

ஏன் நான் பிறந்தேன்
ஏன் தான் வாழ்கிறேன்
வாழ்வே சுமையாய் நான் சுமக்கிறேன்
யார் நான் மறந்தேன்

வேர் நான் இழக்கிறேன்
தீயில் புழுவாய் நான் துடிக்கிறேன்
என் பெயரே மறந்ததே
எவர் முகமோ கிடைத்ததே
நொடிகள் என்னை வதைக்குதே
எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த

தினம் தினம் நான் சாகிறேன்
பயத்தினிலே வாழ்கிறேன்
வலியுடன் நான் போகிறேன்
இருள் மட்டுமே பார்க்கிறேன்

மழையில் நனைந்தேன்
இடியாய் விழுந்தது
எத்தனை முறை தான் நான் சாவது
கனவாய் வாழ்க்கை கலைந்தால் நல்லது

போதும் உலகில் நான் வாழ்ந்தது
அழுதிடவே நீர் இல்லை
அடித்திடு நீ வலி இல்லை
இருந்திட நான் இடமில்லை
எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த



Credits
Writer(s): Annamalai, Vijay Antony
Lyrics powered by www.musixmatch.com

Link