En Kanmani

என் கண்மணி உன் காதலி
இள மாங்கனி
உனை பார்த்ததும்
சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

நன்னா சொன்னேள் போங்கோ

என் மன்னவன் உன் காதலன்
எனை பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

என் கண்மணி...

இரு மான்கள் பேசும் போது
மொழி ஏதம்மா... ஆ...
பிறர் காதில் கேட்பதற்கும்
வழி ஏதம்மா... ஆ... ஆ...

ஒரு ஜோடி சேர்ந்து செல்லும்
பயணங்களில்...
உறவன்றி வேறு இல்லை
கவனங்களில்...

இளமாமயில்...

அருகாமையில்...

வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று அனுபவம் சொல்லவில்லையோ

இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னாடி போ

என் மன்னவன் உன் காதலன்
எனை பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

என் கண்மணி...

தேனாம்பேட்டை சூப்பர் மார்கெட் எறங்கு...

மெதுவாக உன்னைக் கொஞ்சம்
தொட வேண்டுமே... ஏ...
திருமேனி எங்கும் விரல்கள்
பட வேண்டுமே... ஏ... ஏ...

அதற்காக நேரம் ஒன்று
வர வேண்டுமே... ஏ...
அடையாளச் சின்னம் ஒன்று
தர வேண்டுமே...

இரு தோளிலும் மண மாலைகள்

கொண்டாடும் காலம் என்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

என் கண்மணி உன் காதலி
இள மாங்கனி
உனை பார்த்ததும்
சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

என் மன்னவன் உன் காதலன்
எனை பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

என் கண்மணி...



Credits
Writer(s): Ilayaraja, Kovai Balu
Lyrics powered by www.musixmatch.com

Link