Oru Mara Nizhalil (From "Mercury")

ஒரு மர நிழலில் நீயும் நானும் இருந்தோம்
முன்னூறு வருஷம் கழிச்சி
திரும்ப காதல் கண்ணு கலந்தோம்
உன் மூச்சி கூட பேச்சி தான்னு

குறிப்பெடுத்து கிடந்தேன்
உன் வகடு வரைஞ்ச பாதை ஏறி

இருட்டு குள்ள தொலைஞ்சேன்
ஒரு மர நிழலில்

நீயும் நானும் இருந்தோம்

நம்ம தனிமை கலைக்க மனசு இல்லாம
காத்து ஒதுங்கி போச்சி
அந்த நெலவு இழுக்க பறந்த பறவை
கூடு திரும்பியாச்சு
நம்ம கொஞ்சி குலவும் சத்தத்த
ஒட்டு கேக்க இலைய ஒதுக்கும் கிளையே
நம்ம காதல் அள்ளி தின்னுட்டு
மிச்சம் கூட்டி பூவ கக்கும் செடியே

இலயின் நுனியில் பனிய கொறிக்க
தாவி போன முயலு
அது உன்ன பாத்து உறஞ்சு
நிக்குது கண்ணுக்குள்ள புயலு
உதட்டில் இருக்கு ஈர பசைய
உறிஞ்சி போன சிலந்தி
அத திரிச்சு வலய
விரிச்சு உசுர பிடிப்பதாக வதந்தி
காதல் நெரிசல் நடுவுல
எனக்கெடம் உன் மடியில
இந்த இன்பம் போது
உலகம் மறந்த மறந்தேன்
காதல் நெரிசல் நடுவுல
எனக்கெடம் உன் மடியில
இந்த மௌனம் கேட்க
மொழிய இழந்த இழந்தேன்



Credits
Writer(s): Santhosh Narayanan, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link