Meghamai Vanthu Pogiren (From "Thullatha Manamum Thullum")

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே!!! என் அன்பே!!!

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்!!!

உறங்காமலே உளரல் வரும் இதுதானோ ஆரம்பம்
அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்
காதல் அழகானதா? இல்லை அறிவானதா?
காதல் சுகமானதா? இல்லை சுமையானதா?
என் அன்பே!!! என் அன்பே!!!

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்!!!

நீ வந்ததும் மழை வந்தது நெஞ்செங்கும் ஆனந்தம்
நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூவாசம்
என் காதல் நிலா என்று வாசல் வரும்
அந்த நாள் வந்து தான் என்னில் சுவாசம் வரும்
என் அன்பே!!! என் அன்பே!!!

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே!!! என் அன்பே!!!



Credits
Writer(s): S. Rajkumar, Vijayan Vijayan
Lyrics powered by www.musixmatch.com

Link