July 16 Vandhal

பாடகர்கள்: ஸ்ரீநிவாஸ், சுஜாதா மற்றும் சித்ரா

இசையமைப்பாளர்: மனோஜ் பட்நாகர்

பெண்: ஜூலை பதினாறு வந்தால்
வயது பதினேழுதான்
கன்னம் என் கன்னம் கண்டால்
வயது பதினாலுதான்
எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்
எங்கு பிறந்தானோ... ஓஓ... ஓஓஹ்

ஆண்: ஏப்ரல் பதினொன்று வந்தால்
வயது மூவேழுதான்
வண்ண திருமேனி கண்டால்
வயது பதினேழுதான்
வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி
எங்கு பிறந்தாளோ... ஓஓ... ஓஓஹ்

குழு: ...

பெண்: காதல் மேல் காதல் கொள்ள வந்தேன்
காதல்தான் என்னை காணவில்லை
காதல்தான் தேர்வில்லாத பள்ளி
கல்லாமல் நானும் போவதில்லை

பெண்: அந்த கண்ணாளன் முகம் காணவே
என் கண்கள் பூத்தாடுதே
அந்த பொன் நாளும் கை கூடவே
என் மார்பு கூத்தாடுதே...

ஆண்: ஏப்ரல் பதினொன்று வந்தால்
வயது மூவேழுதான்
வண்ண திருமேனி கண்டால்
வயது பதினேழுதான்
வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி
எங்கு பிறந்தாளோ... ஓஓ... ஓஓஹ்

ஆண்: கண் பார்த்து கண்கள் காதல் கொள்ளும்
மெய் காதல் தேடும் எந்தன் உள்ளம்
பொய் காதல் தன்னை மட்டும் காணும்
மெய் காதல் இன்னோர் ஜீவன் பேணும்

ஆண்: என் உடல் எங்கும் கண்ணாகவே
என் காதல் நான் தேடுவேன்...
அது நிறைவேறும் திருநாளிலே...
எவரெஸ்ட்டில் நான் பாடுவேன் ஏஹ் ஏஹ்.

பெண்: ஜூலை பதினாறு வந்தால்...
வயது பதினேழுதான்...

ஆண்: வண்ண திருமேனி கண்டால்...
வயது பதினேழுதான்...

பெண்: எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்...
எங்கு பிறந்தானோ...

குழு: ...



Credits
Writer(s): R Vairamuthu, Manoj Bhatnagar
Lyrics powered by www.musixmatch.com

Link