Ponnoviyam

பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரின்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
பொன்னோவியம்...

காதல் காதல் காதல் தினம் தேனாகும்
வாழ்வில் கீதம் பாடும் மனம் பாலாகும்
பாயும் நதி நீரோடு நீந்தும் சுகம் நூறாகும்... நூறாகும்

பூவில் இளந்தென்றல் வந்து ஆடிச்செல்லும்
போதை கொண்ட நெஞ்சம் இன்று பாடச்சொல்லும்
கைகள் இணையும், கண்கள் மயங்கும் சொர்க்கம் திறக்கும்

மேகம் வந்து சேரும் மயில்தான் ஆடும்
மோகம் கொண்ட நெஞ்சம் துணை சீராட்டும்
கோவை இதழ் தேனுண்டு கொஞ்சும் கிளி நானுண்டு... நானுண்டு
பச்சைமலை எங்கும் துள்ளி ஓடும் மான்கள்
இச்சையுடன் கொஞ்சிக் கொஞ்சி ஆடும் நேரம்
காயும் கனியும் மொட்டும் மலரும்
சொர்க்கம் தெரியும்

பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே



Credits
Writer(s): P Arunachalam, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link