Aala Aala

ஆலா ஆலா வானில் ஏற வா
வெண்ணிலாவை மூட்டை கட்டி
மண்ணில் கொண்டு வா வா
ஆலா ஆலா பறந்து செல்ல வா
வானவில்லை தாண்ட வா
ஈர காற்றிலே தூரம் செல்ல வா
நீல நீளம் தாண்ட பாலம் செய்ய வா
மேக மேடையில் ஜோடி சேர வா
மின்னல் வெட்டில் ஆட வா
ஆலா ஆலா காதல் கொண்டதாலா
தூரம் இல்லை அந்த வெண்ணிலா
ஆலா ஆலா காதல் கொண்டதாலா
இன்பம் இன்பம் கண்ணில் கண்ணிலா

வா சிறு சிறகினில்
முழு மதியினை ஏந்த வா
உனதழகினில் எனதழகினை
தீண்ட வா
வா உயர் உலகினில்
உயிர் உரசியே ஆட வா
முடிவிலியினை நொடி
பொழுதினில் தாண்ட வா
விண்மீன்கள் தாண்டி
கோள்கள் யாவும் தாண்டி தாண்டி
வேர் ஒரு பூமி உண்டாக்கலாம்
மேகத்தில் மூடி கொண்டு வந்த
வெண்ணிலாவை தூசி தட்டி
சுத்தம் செய்து காதல் வானில்
ஒட்டி கொள்ளலாம்
ஆலா ஆலா காதல் கொண்டதாலா
தூரம் இல்லை அந்த வெண்ணிலா
ஆலா ஆலா காதல் கொண்டதாலா
இன்பம் இன்பம் கண்ணில் கண்ணிலா



Credits
Writer(s): Madan Karky, Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com

Link