Mappillaikku Maman

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு

புதிய ஒரு ஜோடி பொருத்தம் பல கோடி
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பல கோடி
பருவ வயது கடந்த பிறகும்

துடிக்கிற மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு

நடந்தவரை வயசுக்கு பொருத்தமில்லை
நடக்கும் கதை மனசுக்கு அமைதியில்லை
நடந்தவரை வயசுக்கு பொருத்தமில்லை
நடக்கும் கதை மனசுக்கு அமைதியில்லை

விதைத்த விதை முளைத்தது மாறவில்லை
விதைத்த விதை முளைத்தது மாறவில்லை
விதைத்து விட்டு துடிப்பதில் லாபமில்லை
தசரதா புரிந்ததா ஹரிகதா தெரிந்ததா
எனக்கும் உனக்கும் புரிந்த வரையில் புரியட்டும்

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு

கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளை காண்பதுண்டு
கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளை காண்பதுண்டு

குற்றமென சொன்னது சொன்னது தான்
நெற்றிக்கண்ணை திறந்தவன் கண்டது தான்
சிவனிடம் துணிந்தவன் எவனிடம் அஞ்சுவான்
உலகம் முழுதும் அறிந்த கதைக்கு விளக்கமா

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு

புதிய ஒரு ஜோடி
பொருத்தம் பல கோடி
பருவ வயது கடந்த பிறகும்

துடிக்கிற மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு



Credits
Writer(s): Panju Arunachalam, Ilaiyaraaja Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link