Alanadhegam Yengum

ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை
ஹேய் ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை

தித்திக்கும் தேகத்தை
தேனீக்கள் மொய்க்குதே
ஒத்தைக்கு ஒத்தையாக வாடா

தூங்காத கண்ணுக்குள்
நீ தூங்க வருவாயா
வெண்ணிலா கன்னம் தொட்டு
வேரோடு பறித்திடு

ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை

எட்டு பதினெட்டு
இந்த பெண்ணோட தேகம் தொட்டு
ஆடு விளையாடு நீதான்

கையால் இரு கையால்
நீ என்னை பூட்டி கொள்ள
வா வா வருவாயா நீதான்

இந்த மெழுகுவர்த்தியை
தினம் ஏற்றி வைத்திடு
என்னை உறங்க வைத்திடு வா வா

மூன்றாம் பிறையினை
நீ ஊதி ஊதியே
அதை முழுமை ஆக்கிடு வா வா

ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை

நீயோ அட நானோ
ஒரு நேர்கோட்டில் நடந்து வந்தால்
யோகம் சுக யோகம் தீரும்

வண்டு ஒரு வண்டு
இரை இல்லாமல் போன பின்னே
பூவாய் பிறந்தாலே பாவம்

பல முட்கள் நடுவிலே
ரோஜா வாழ்வது
அட பாவம் இல்லையே வா வா

ஒரு மெத்தை மீதிலே
ஒரு முத்தம் தந்து நான்
உன்னை மென்று திங்கவா வா வா

ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை

தித்திக்கும் தேகத்தை
தேனீக்கள் மொய்க்குதே
ஒத்தைக்கு ஒத்தையாக வாடா

தூங்காத கண்ணுக்குள்
நீ தூங்க வருவாயா
வெண்ணிலா கன்னம் தொட்டு
வேரோடு பறித்திடு



Credits
Writer(s): Kabilan, Manisharma Manisharma
Lyrics powered by www.musixmatch.com

Link